Author: Editor web2
மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய திரைப்பட விருதுகளில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சிறந்த பின்னணி இசைக்காகத் தனது 3-வது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், “என் அன்புத் தம்பி ஜி.வி.பிரகாஷ், உங்களின் 3-வது தேசிய விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நாம் இணைந்து கொண்டாடும் 10-வது தேசிய விருது என்பதால் இது எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம். இசையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது. இன்னும் பல உயரிய மைல்கற்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் உங்களை என்றும் ஆசீர்வதிக்கட்டும்” என வாழ்த்தி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷின் 3…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக எம்பி.க்கள் நாடாளுமன்றச் செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல், அயோத்தி ராமர் கோயில் நில மோசடி சர்ச்சை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசின் தொடர் தோல்விகள் மற்றும் சோனம் வாங்சுக் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எழுப்ப ‘இண்டியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதில் வழக்கம்போல திமுக தங்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பும் என காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் நம்பியிருந்தன. நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ‘மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் திமுக இணைந்து நிற்கும்’ என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் நம்பிக்கை…
திருவாரூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக அரசின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தார். தவெக அரசுக்கு சிபிஎம் அளித்து வரும் ஆதரவு குறித்து பேசிய அவர், “நாங்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்தே ஆதரவு அளித்து வருகிறோம். மே 8-ஆம் தேதி முதல் எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சியில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு எங்களுக்கு அரசியல் பலம் இல்லாத நிலையில், ஆட்சியில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார். தற்போதைய ஆட்சியின் நிர்வாகம் குறித்து அவர் கூறுகையில், “பல்வேறு விஷயங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பலரும் என்னிடம் கூறுகிறார்கள். பணியிட மாற்றங்கள் எந்தவித பணப் பரிவர்த்தனையும் இல்லாமல் நடைபெறுகின்றன. அரசு ஒப்பந்தங்களும் லஞ்சமின்றி நியாயமான முறையில் வழங்கப்படுகின்றன என தகவல்கள்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மேற்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “விசிக ஏன் தமிழ் தேசியத்தைப் பேசுகிறது என்ற கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்த் தேசிய உணர்வை வளர்ப்பதற்காகவே ஆண்டுதோறும் தமிழர் எழுச்சி நாளை கட்சி கொண்டாடி வருகிறது. சாதியை வேரறுக்கும் தமிழ்த் தேசியமே எங்கள் அரசியல். சாதி வெறி கொண்ட தமிழன் அல்ல, சாதியை ஒழிக்கும் தமிழன்தான் எங்களுக்குத் தேவை,” என்றார். மேலும், “அம்பேத்கர் மொழி, சாதி, மத பெருமையை வலியுறுத்தியவர் அல்ல. இந்தியாவில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் வாழ்நாள்…
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்தும் அறிவிப்பு, வரும் மாநில பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அரசுத் துறைகள் சார்பில் 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். அதன் அடிப்படையில், தற்போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் அரசிடம் இருப்பதாகவும், மாவட்டந்தோறும் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில்…
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சீனிவாசன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்வைத்ததாகக் கூறப்படும் குதிரை பேர குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, குதிரை பேரம் தொடர்பான புகாரில் மாநில காவல்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், செய்தித்தாள்கள்,…
நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GDN) திரைப்படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், தற்போது IMDb வெளியிட்டுள்ள ’இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்’ (Most Anticipated New Indian Movies and Shows) பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், IMDb-ன் ரியல்டைம் தரவரிசையில் 11.1 சதவீத மதிப்பெண் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக ‘ஜி.டி.என்.’ இடம்பிடித்துள்ளது. ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர். மாதவன் இணைத் தயாரிப்பாளராக உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா…
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. மாலை சுமார் 5 மணி அளவில் தொடங்கிய சோதனையில், அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சோதனையின் ஒரு பகுதியாக அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. வாகனங்களில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை நடைபெற்று வந்ததால், வடக்கு தாசில்தார் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டு, பொதுமக்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அலுவலக வளாகத்தில் இருந்த அனைத்து…
மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது விவரங்களை இணையவழியில் பதிவு செய்து, மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். “அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை அல்ல; நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் அடிப்படையாக அமையும்” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குடும்பமும் தங்களது விவரங்களை உண்மைத்தன்மையுடன் பதிவு செய்ய வேண்டும் என்றும், இணையவழி சுய கணக்கெடுப்பு வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நானும் சுய கணக்கெடுப்பு முறையில் எனது விவரங்களை பதிவு செய்துள்ளேன். அதுபோல அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள…
இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த மாதம் கெர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு ஆண்டி பர்ன்ஹாமைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. மேக்கர்பீல்டு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பர்ன்ஹாம், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7-வது பிரதமராக அடுத்த வாரம் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். தற்போதைய பிரதமர் ஸ்டார்மர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் மூன்றாம் சார்லசிடம் முறையாக வழங்கிய பிறகு, புதிய அரசு அமைக்க பர்ன்ஹாமிற்கு மன்னர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பார். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது முதல் உரையை நிகழ்த்திய ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை அளிக்கப் போகிறோம்.…