Close Menu
    What's Hot

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி
    Featured

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    Editor web2By Editor web2June 12, 2026Updated:June 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Farmer drought
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியன்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபு. ஆனால், மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் அணை திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில், தண்ணீருக்கு முறையான வழி செய்யாமல், “ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல” வெறும் குறுவை சிறப்புத் தொகுப்பை மட்டும் அறிவிக்கும் இந்த ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தற்போது தனது சொந்த வேண்டுதலுக்காகக் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றுள்ளார் என்று திமுக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.

    மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார்.

    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!
    Next Article திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!
    Editor web2
    • Website

    Related Posts

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    June 12, 2026

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    June 12, 2026

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.