கடந்த 2 நாட்களாகக் குறைந்து வந்த தங்கம் விலையானது இன்று (ஜூலை 15) மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி: ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று விற்கப்பட்ட விலையில் இருந்து ரூ. 240 உயர்ந்து, ரூ.1,05,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.13,180-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைப் போன்றே, வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 வரை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து, ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து, ரூ. 2,40,000-க்கு விற்பனையாகிறது.
