Close Menu
    What's Hot

    லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் எண்ணில் புகார்… தமிழக அரசு அதிரடி!

    அரசு அலுவலகங்களில் இனி லஞ்சமா.. வாய்ப்பே இல்ல..!! ஊழல் ஒழிப்பில் தமிழக அரசு அதிரடி..!!

    கோவை அரசு மருத்துவமனை நடப்பது சிகிச்சையா? கொடுமையா?. தெருவோரங்களில் தவிக்கும் நோயாளிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்; தீவிர விசாரணை
    அரசியல்

    ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்; தீவிர விசாரணை

    Editor web2By Editor web2July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EV Velu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. “அறப்போர் இயக்கம்” ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதுடன், ரூ.40 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.

    இதன் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகார்தாரர் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைக்காக எ.வ.வேலுவுக்கு கடந்த 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஆஜராக வேண்டிய நாளில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருதய சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக இயலாது என்றும், சிகிச்சை முடிந்ததும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் வழக்கறிஞர்கள் மூலம் விளக்க மனு தாக்கல் செய்து கால அவகாசம் கோரியிருந்தார்.

    இந்த நிலையில், இன்று மீண்டும் ஆதரவாக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பி இருந்தார் அப்போது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக்கு நீதி கிடைக்கும் என பேசி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் டெண்டர் ஒதுக்கீடு, நிதி பரிவர்த்தனைகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    DVAC EVVelu tamilnadu TenderScam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர் : இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! கணவர் குடும்பத்தினர் கைது..!
    Next Article கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!
    Editor web2
    • Website

    Related Posts

    லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் எண்ணில் புகார்… தமிழக அரசு அதிரடி!

    July 15, 2026

    அரசு அலுவலகங்களில் இனி லஞ்சமா.. வாய்ப்பே இல்ல..!! ஊழல் ஒழிப்பில் தமிழக அரசு அதிரடி..!!

    July 15, 2026

    கோவை அரசு மருத்துவமனை நடப்பது சிகிச்சையா? கொடுமையா?. தெருவோரங்களில் தவிக்கும் நோயாளிகள்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் எண்ணில் புகார்… தமிழக அரசு அதிரடி!

    அரசு அலுவலகங்களில் இனி லஞ்சமா.. வாய்ப்பே இல்ல..!! ஊழல் ஒழிப்பில் தமிழக அரசு அதிரடி..!!

    கோவை அரசு மருத்துவமனை நடப்பது சிகிச்சையா? கொடுமையா?. தெருவோரங்களில் தவிக்கும் நோயாளிகள்!

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.