Author: Editor web1
விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்துள்ளதாகவும், விவசாயிகளுக்காக 100 முறை கூட கைதாகத் தயார் என்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயப் போராட்டம் மற்றும் தனது கைது நடவடிக்கை குறித்து உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தான் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஆளுங்கட்சியினர் அவதூறு பரப்பியதாகவும், விவசாயிகளின் துயர் துடைக்கத் தவறிய அரசு பிரச்சினைகளை திசைதிருப்பவே தன்னை கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை அலைக்கழிப்பதாக நினைப்பவர்கள், யாரையோ திருப்திப்படுத்த முயல்கிறார்கள் என்று உதயநிதி விமர்சித்துள்ளார். தான் கைது செய்யப்பட்டபோது ஊடகங்களைப் பார்த்து இதைக் நகைச்சுவையாக பார்ப்பதாகக் கூறிவிட்டு வந்ததாகவும், காவல்துறையைப் பார்த்து தான் பயந்து ஓடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின்போது அடுத்தவர்களுக்குப் பயந்து ஓடியது யார் என்பது நாடறியும் என்று உதயநிதி…
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரிவரும் பலுசிஸ்தான் பகுதி, ஆகஸ்ட் 11-ஆம் தேதியை தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 11-ஐ தேர்ந்தெடுத்துள்ள பலுச் அமைப்புகள், உலக நாடுகள் தங்களை ஒரு சுதந்திரத் தனி நாமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. ‘குடியரசுப் பலுசிஸ்தான்’ (Republic of Balochistan) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பலுச் மக்கள் தங்கள் வீடுகள், சந்தைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுதந்திர பலுசிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி, இந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என பலுச் சுதந்திர இயக்கத் தலைவர் மீர் யார் அழைப்பு விடுத்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து விடுதலை பெற்ற போது, பலுசிஸ்தான் முதல்முறையாக கடந்த 1947 ஆகஸ்ட் 11 அன்று தனது சுதந்திரத்தை அறிவித்தது. அந்த வரலாற்றுச் சிறப்பைக் குறிக்கும் விதமாகவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பலுச் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் கார் பந்தய சாதனைகள் மற்றும் அவரது மோட்டார் ஸ்போர்ட் பயணத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்: இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ (Gladiators: In Pursuit of Challenges) ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான அஜித்குமார், 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 63 திரைப்படங்களில் அஜித் நடித்துள்ளார். இந்தநிலையில், ஷாலினி அஜித்குமாரின் ‘பிரேவ் ஹார்ட்ஸ் ப்ரொடக்ஷன்’ (Brave Hearts Production) நிறுவனம் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 64வது படமான டேர் டெவில் படத்தில் நடிக்க உள்ளார். திரையுலகத்தை தாண்டி, கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வருகிறார். இதற்காக தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing)…
10-வது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திண்டுக்கல் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அமித் சத்விக் 20 ரன்களும், உத்திரசாமி சசிதேவ் 17 ரன்களும் சேர்த்தனர். பந்துவீச்சு தரப்பில் திண்டுக்கல் அணியின் பி. புவனேஸ்வரன் மற்றும் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 108 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அணியின் தொடக்க…
இந்தியத் திரையுலகில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்கள் மூலம் மக்களிடம் நீங்கா இடம் பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார். அவருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தநிலையில், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பிரதீப் ராவத். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கஜினி’ மற்றும் அதன் இந்தி ரீமேக்கில் மிரட்டலான வில்லனாக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். அஜித்தின் வீரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். அமீர்கானின் ஆஸ்கர் பரிந்துரை பெற்ற ‘லகான்’ திரைப்படத்தில் ‘தேவா’ என்ற துணிச்சலான சிப்பாய் கதாபாத்திரத்தில் நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நூறு படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் பிரதீப் ராவத்…
கோவை மருதமலை அருகே லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ் சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கமான ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தற்போது மலைப் பாறைகளுக்கு இடையே கருஞ் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாகத் தாவி குதித்து கீழே இறங்கி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஒருவரால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் கருஞ் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், லெப்ரஸ் காலனி மற்றும் மருதமலை பகுதி மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்,…
தமிழகத்தில் முக்கியப் பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களுக்கு இனி முதலமைச்சரின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தலைமைச் செயலாளர் சாய்குமார் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணி அதிகாரிகள் (IAS, IPS), கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO), காவல் கண்காணிப்பாளர்கள் (SP), கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் இனி கட்டாயமாக முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-ன் விதி 35(4)-ன் கீழ் கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும் மற்றும் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7 ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசுத்துறையில் இருந்து மற்றொரு துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய்,…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026- 2027-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று (ஆகஸ்ட் 5) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், மே 10-ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளான 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் படை, மாவட்ட வாரியாக போதைப் பொருள் தடுப்பு படை ஆகிய 3 உத்தரவு கோப்புகளில் முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இந்தநிலையில், தவெக அரசின் 2026- 2027-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பு தொடா்பாக துறைவாரியாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் தனித்தனியாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சா் மரிய வில்சன் பட்ஜெட் தயாரித்துள்ளாா். காலை 10 மணிக்குத் தனது முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தாக்கல்…
சுதந்திரத்திற்குப் பிறகு தேர்தல் வரலாற்றில் மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு சதவீதம் தமிழகத்தில் பதிவாகி இருப்பதற்கு தமிழ்நாடு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்துகளை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.93 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்குகளின் எண்ணிக்கையாகும் என்றார். இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 86 சதவீதம் வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளதாகவும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவே மிக அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும் என்று தேர்தல் ஆணையர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காகத் தான் கோவை வந்ததாகத் அவர் தெரிவித்தார். தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட…
தமிழ்நாட்டில் குடிநீர் ஆதாரங்களைப் பலப்படுத்தவும், அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவும் ₹340 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் வழக்கத்தை விட மழைக்குறைவு பதிவாகியுள்ளது. 20 மாவட்டங்களில் 19% முதல் 59% வரையிலும், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 60%-க்கும் குறைவாகவும் மழை பெய்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. பழைய ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய கிணறுகள் அமைத்தல், பழுதடைந்த மின் மோட்டார்கள் மற்றும் குழாய்களை மாற்றுதல், தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகித்தல் போன்ற…