Author: Editor web1
போதைப் பொருள் ஒழிப்பு, சட்டம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காவல்துறை மற்றும் பல்வேறு படைப் பிரிவினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினர் என மொத்தம் 665 பேருக்கு முதலமைச்சர்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சார விநியோகத்தில் தொடர் தடங்கல், மின் கட்டண குளறுபடி ஏற்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் Reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட…
தமிழ் திரையுலகின் என்றென்றும் நிலைத்திருக்கும் காவியங்களில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் (ஜூலை 31) 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் இசைப்பேரொளி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இணைந்து நடித்த இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை இயக்கியதுடன் நின்றுவிடாமல், “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவனின் பேராற்றலையே எதிர்த்து கேள்வி கேட்கும் நக்கீரர் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருப்பார். சிவபெருமானாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கம்பீரமான நடிப்பும், பார்வதி தேவியாக சாவித்திரியின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தவை. ஏ.பி.நாகராஜனின் தத்துவார்த்தமான வசனங்களும் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் திரைக்காவியங்களில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன்…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், தீபம் ஏற்றுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது எனவும், பாரம்பரிய வழக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்புக் அனுமதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வாதிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான வழக்கு உச்ச…
இந்திய கடற்படையை பலப்படுத்தும் நோக்கில், சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் விரைவில் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் தெரிவிக்கையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம் மிக விரைவில், அடுத்த சில வாரங்களுக்குள் இறுதி செய்யப்படலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டமான ‘புராஜெக்ட் 75I’ திட்டத்தின்கீழ், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 6 புதிய வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படவுள்ளன. இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படாமல், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள மசாகன் டாக் கப்பல்கட்டும் நிறுவனத்தில் ஜெர்மனியின் ‘திச்கிரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே கட்டப்படவுள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் எரிபொருள் செல் அடிப்படையிலான ‘ஏர் இன்டிபென்டன்ட் பிரபல்ஷன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.…
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு அதிக அளவில் உறிஞ்சப்பட்டு திடீரென வெடித்ததே இந்த கோர விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்தபோது உள்ளே வேலை செய்துகொண்டிருந்தவர்களில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 24-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாலும், நச்சு வாயுக்கள் சூழ்ந்துள்ளதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாகாண அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி…
2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பளுதூக்குதல் 110 கி.கி பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் அபாரமாகப் செயல்பட்ட லவ்பிரீத் சிங், மொத்தமாக 388 கிலோ எடையைத் தூக்கி (ஸ்னாட்ச் பிரிவில் 176 கி.கி + கிளீன் & ஜெர்க் பிரிவில் 212 கி.கி) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஸ்னாட்ச் பிரிவில் தனது மூன்றாவது முயற்சியில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் போட்டி சாதனையைப் படைத்த லவ்பிரீத் சிங், தொடக்கக் கட்டத்தில் முன்னிலை பெற்றார். தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லவ்பிரீத் சிங், கடும் போட்டிக்கு இடையே நியூசிலாந்தின் டேவிட் லிட்டியிடம் (மொத்தம் 389 கி.கி) வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். கடந்த காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றிருந்த லவ்பிரீத் சிங், இம்முறை தனது…
2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்ற சீமா கலிராம்னா, தனது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் வட்டு எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். குழந்தை பிறந்து தாய்மை அடைந்த பிறகு, தீவிர பயிற்சியை மேற்கொண்டு சர்வதேச அரங்கில் சீமா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் ஜமைக்காவின் சமந்தா ஹால் (61.66 மீ) தங்கப் பதக்கத்தையும், கனடாவின் ஜூலியா டங்க்ஸ் (60.67 மீ) வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இதே போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான நிதி ராணி 57.10 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் ‘தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா- 2026’, மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1971-ம் ஆண்டின் ‘தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத்தில்’ மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தின் மூலம், தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான சட்டப் பாதுகாப்பு தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்கப்படுகிறது. வந்தே மாதரம் பாடப்படுவதை வேண்டுமென்றே தடுப்பது அல்லது பாடும் கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்துவது ஆகியவை குற்றமாக கருதப்படும். இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று (ஜூலை 30) மக்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,…
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 3-வது இடத்திற்குத் தள்ளும் செயலுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக சில அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில், தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஆகிய பாடல்களுக்குப் பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்தில் பாடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கடந்த 28ம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் இத்தகைய நிகழ்வு நடைபெற்று தமிழக அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. இந்தநிலையில், இந்த பிரச்சனை குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்களின் உணர்வோடும், பண்பாட்டோடும் கலந்தது என்றும் அதை 3-வது இடத்திற்குத் தள்ளுவது என்பது, தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் அடையாளத்தின் மீதும் தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதல் என்றும்…