Close Menu
    What's Hot

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    கால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து: 18 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!
    Featured

    பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து: 18 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!

    Editor web1By Editor web1July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 35
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு அதிக அளவில் உறிஞ்சப்பட்டு திடீரென வெடித்ததே இந்த கோர விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்தபோது உள்ளே வேலை செய்துகொண்டிருந்தவர்களில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 24-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாலும், நச்சு வாயுக்கள் சூழ்ந்துள்ளதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாகாண அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் பளுதூக்குதல்: ஸ்னாட்ச் பிரிவில் வெள்ளி வென்றார் லவ்பிரீத் சிங்!
    Next Article இந்திய கடற்படையை பலப்படுத்த மெகா திட்டம்: ஜெர்மனியுடன் விரைவில் ரூ.90,000 கோடிக்கு ஒப்பந்தம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    July 31, 2026

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    July 31, 2026

    கால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    கால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!

    உண்டியல்களில் பணம் போட்ட ராகுல் காந்தி.. நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டம்..!!

    அமளி ஓயாததால் பாராளுமன்றம் முடக்கம்; ஆகஸ்ட் 3 வரை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.