Author: Editor web1
தமிழகத்தில் ஜூலை மாதத்துக்கான வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மே மாதக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது அதிக மாறுபாடு கொண்ட 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளைக் கள ஆய்வு செய்து மறு பரிசீலனை செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான இருமாத மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்துள்ளதாக நுகர்வோர் வேதனை தெரிவித்தனர். கடந்த முறை ரூ.300 முதல் ரூ.400 வரை மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு இந்த முறை ரூ.800 முதல் ரூ.1,000 வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இலவச மின்சாரச் சலுகைகள் இருந்தும் அதிகத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களைப் பதிவிட்டு வந்தனர். பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, மின்சார வாரியம் மூத்த அதிகாரிகளைக் கொண்டு நேரடியாக மறுஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிகாரிகளுக்கு ஆய்வு…
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (ஜூலை 30) மீண்டும் கூடுகிறது. டெல்லி பிகாஜி காமா வளாகத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் நேரடியிலும், இணையவழியிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யப்ரதா சாஹூ, ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பில்லிகுண்டுலுவில் 3.442 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 28.337 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும், இதனால் 24.896 டி.எம்.சி அளவுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், கர்நாடகப் பிரதிநிதிகள் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும் வறட்சி மற்றும் பெங்களூரு நகர குடிநீர்த் தேவைகளைக் சுட்டிக்காட்டியும் தண்ணீர் திறக்க…
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, தன்னை சிறையிலடைத்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கைதுக்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். அரசியல் பேச்சுக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரின்…
புதிதாகத் தொடங்கப்பட்ட E20 மக்கள் கட்சியின் (E20 Janata Party) இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, எத்தனால் கலப்பில்லாத எரிபொருளை வலியுறுத்தி இ20 மக்கள் கட்சி (E20 Janata Party) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கு E20 (20% எத்தனால்) கலக்கப்படாத பெட்ரோல் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை இவர்கள் பிரதானமாக வலியுறுத்துகின்றனர். மேலும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகக் கோரியும் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தொடங்கப்பட்ட இக்கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து வரிசையில் மூன்றாவதாகப் பாடப்பட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள சட்டம், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கூட மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் நிர்மல் குமார் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைவர் மட்டுமே புகார்களை விசாரித்து வருவதால் 37 ஆயிரம் புகார்கள் வரை தேக்கமடைந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் காலியிடங்களை நிரப்பக் கோரி தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளது. இந்தத் தொடருக்குச் ஷுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி, ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கும் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 23-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் தொடங்கவுள்ளன. இந்தநிலையில் இலங்கை பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (வி.கீ), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்புப் பணிகளின் இரண்டாம் நாளான இன்று, அடையாற்றை சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரிக்கும் சிறப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28) சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அடையாற்றை சீரமைக்கும் பணியை அமைச்சர் என்.ஆனந்த் தொடக்கி வைத்தார். அடையாற்றின் நீரோட்டத்தை மேம்படுத்துதல், எதிர்வரும் மழைக்காலங்களில் வெள்ளநீர் எவ்விதத் தடையுமின்றி சீராக வடிந்தோடுவதை உறுதிசெய்தல், ஆற்றின் நீர் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். அனைத்துப் பணிகளையும் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், இந்தத் தடைக்கான முக்கியக் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன: தமிழகத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், ஜல்லி, எம்-சாண்ட் (M-Sand), பாறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்திற்குள் பெருமளவில் அதிகரித்துள்ளது. பெருமளவிலான கட்டுமானப் பொருட்கள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் லாரிகளால் உள்ளூர் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மேலும், இத்தகைய வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி, சட்டவிரோத குவாரித் தொழிலுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி…
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, செல்போன் பயன்பாடு மற்றும் சத்தமாக பாட்டு ஒலிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், பயணிகள் சிலர் ஸ்பீக்கர் போனில் பேசுவது மற்றும் சத்தமாக வீடியோக்கள் பார்ப்பதால் இரைச்சல் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் முத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் தேர்வுக்குத் தயாரிப்பு செய்யும் மாணவர்களுக்கு இது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததுது. இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார். அதில், பேருந்தில் செல்லும் பயணிகள் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்தி மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோக்களைக் கேட்க வேண்டும் என்று…