Author: Editor web1

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 79 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் வல்லூரி அஜய் பாபு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அஜய் பாபு மொத்தமாக 330 கிலோ (ஸ்னாட்ச் முறையில் 149 கிலோ + கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 181 கிலோ) எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையையும் அவர் படைத்தார். போட்டியின் முடிவில் மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது 331 கிலோ எடையைத் தூக்கி (புதிய காமன்வெல்த் சாதனை) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அஜய் பாபு வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே 325 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அஜய் பாபுவின் தந்தை…

Read More

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா தடகளப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வீராங்கனை ஷர்மிளா தன்கர் வரலாறு படைத்துள்ளார். பெண்களுக்கான ‘ஷாட் புட்’ (குண்டு எறிதல்) F57 பிரிவில் பங்கேற்ற ஷர்மிளா (40), 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்தார். இந்தச் சீசனில் இது இவரது சிறந்த செயல்பாடாகும். இதன் மூலம் காமன்வெல்த் பாரா தடகளப் பிரிவில் பதக்கம் வெல்வதற்கான இந்தியாவின் 20 ஆண்டு கால காத்திருப்புக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான ஷில்பா ஷைலா 7.26 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். தொடக்கத்தில் நைஜீரியாவின் யூச்சாரியா ஐயாசி வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டநிலையில், இந்தியத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ மறுஆய்வில், நைஜீரிய வீராங்கனையின் முயற்சி ‘ஃபவுல்’ என அறிவிக்கப்பட்டது. இதனால் நான்காவது இடத்தில்…

Read More

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கிய  அரசுப் பணியை ரத்து செய்த உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டர் கோரிக்கை  வைத்துள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள 31 பேருக்கு, கடந்த ஜூலை 10-ம் தேதி கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார். அரசு வேலை வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஜூலை 27) தீர்ப்பளித்தது. அதில், தற்காலிகப் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டி, 31 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்த ரவி கிருஷ்ணாவின் தாயார் ஞானாம்பாள் செய்தியாளர்களுக்கு பேட்டி…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகள் அமைய உள்ளன. 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகப் பிரிவுகள், வரவு செலவு பிரிவுகள், பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதல்வரின் சமூக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை தரைத்தளம், 2-ம் தளம் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகின்றன. சுற்றுலாத் துறையின் எழுது பொருட்கள் அறை, 9-வது தளத்திற்கு மாற்றப்படுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றப்படும் புதிய அலுவலகங்களில் உடனடியாகப் பணிகளைத்…

Read More

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட தற்காலிக பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் திடீரென தீப்பற்றி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த ராம்பிரகாஷ் (32), ராமச்சந்திரன் (40), இன்னாசிமுத்து (44), பாண்டித்துரை (35) ஆகிய  தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு உற்பத்தி கூடங்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி…

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சட்டீஸ்கரைச் சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ் (23) தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் என மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நைஜீரிய வீராங்கனை ஓனோமே ஒமோலோலா டிடிஹ் மொத்தம் 206 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், கனடாவின் ரபெகா க்ரூக்ஸ் 178 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இந்தப் போட்டியில் ஞானேஸ்வரி யாதவ் வென்ற பதக்கத்தின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு 2026 தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. பளுதூக்குதல் பிரிவில் இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதுவரை…

Read More

ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய  வீராங்கனை ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினர். சீனாவின் ஹாங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கப் பதக்கமும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே நிதானமாகவும் துல்லியமாகவும் இலக்குகளைச் சுட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த ஈஷா சிங், 40 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர், கடுமையான போட்டிக்கு இடையே ‘ஷூட்-ஆஃப்’ சுற்றில் வெற்றி பெற்று 28 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.  சீனாவின் யுயுவே ஜாங் 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 586-20x…

Read More

2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளநிலையில், தங்களின் கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளதாக அவரின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதல் 65 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி- தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி பேச்சியம்மாள் தம்பதியின் இளைய மகன்தான் இந்த சாதனை வீரன் ராஜா. ராஜாவும் அவரது அண்ணன் சுரேஷ்குமாரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வந்தனர். உடற்பயிற்சிக் கூடத்தில் இவர்களின் ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர்கள், இருவரையும் பளுதூக்கும் போட்டிக்குத் தயார்படுத்தினர். பள்ளிக் காலத்திலேயே பளுதூக்குதலில் சிறந்து விளங்கிய ராஜாவுக்கு, மயிலாடுதுறையில் உள்ள தனியார் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெற்ற தீவிர…

Read More

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில் 85 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்து அசத்தி உள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்துள்ளார். மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவின் ஸ்னாட்ச் சுற்றில், மீராபாய் சானு 85 கிலோ எடையைத் தூக்கிப் புதிய காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் சாதனையைத் தன் வசப்படுத்தினார். முதல் முயற்சியில் 82 கிலோ எடையைத் தூக்கும் முயற்சி தவறியபோதிலும், இரண்டாவது முயற்சியில் அதைச் சிறப்பாகத் தூக்கினார். பின்னர் தனது இறுதி முயற்சியில் 85 கிலோ எடையைத் தூக்கி வரலாற்றுச் சாதனை புரிந்தார். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையைத் தூக்கி, ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையுடன் 2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான…

Read More

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகம் வருகை தர உள்ள ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதியை நிலைநாட்டுவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது ஆகிய இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியைத் தமிழக காங்கிரஸ் குடும்பமும் மக்களும் உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நமது பயணம்…

Read More