Author: Editor web1

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாகத் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையிலடைக்கப்பட்ட மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமின் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, மார்க்கண்டேயனின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி…

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர் வெற்றிகளைப் பெற்று அசத்தி வருகின்றனர். இதுவரை இந்திய அணி 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மகளிருக்கான ‘ஷாட் புட்’ F57 பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தங்கப் பதக்கம் வென்றார். ஆண்கள் பளுதூக்குதல் 60 கிலோ எடைப்பிரிவில் ரிஷிகந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் பளுதூக்குதல் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். பளுதூக்குதல் 79 கிலோ பிரிவில் அஜர் பாபு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மகளிர் பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில்…

Read More

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியின் போது நிகழ்ந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேர் கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், அதில் 101 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் டெல்லி காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கியது. சுமார் 20 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த இப்போராட்டம், கடந்த ஜூலை 20 அன்று வன்முறையாக மாறியது. நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுமாறு CJP விடுத்த அறிவிப்பையடுத்து, ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட 2,873 பேரிடம் டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார்…

Read More

முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த 5 நாளில் ரூ.233 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசிப் படம் என்பதால், இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சமூக வலைதளங்களில் இப்படம் 5 நாட்களில் ரூ.233 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியலில் முழுநேரமாகக் களமிறங்குவதற்கு முன்பு விஜய் நடித்த கடைசித் திரைப்படம் என்பதால், இந்தப் படம் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் தழுவலாக இருந்தாலும், தமிழக ரசிகர்களுக்கு ஏற்பப் பல மாற்றங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ,…

Read More

தமிழக பட்ஜெட் தொடரை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன.  இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்குக் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 28 மாலை 5 மணிக்குக் காணொலி மூலம் நடைபெறும். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசுக்கு எதிராக எந்தெந்தப் முக்கியப்…

Read More

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வ உறுதி அளிக்காவிட்டால், மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்க நேரிடும் என கரப்பான் பூச்சி கட்சி அமைப்பு எச்சரித்துள்ளது. டெல்லியில் CJP செய்தித் தொடர்பாளர்கள் ஆசுதோஷ் ரான்கா தலைமையில் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும், புதிதாக வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டதாக CJP செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை அரசு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) அரசு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கத் தவறினாலோ அல்லது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கத் தவறினாலோ, மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுக்கப்போவதாக…

Read More

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி அளித்த பதிலில் இந்த முக்கியத் தகவல் இடம்பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நீர் தீர்ப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? மேகதாது திட்டத்திற்காக கர்நாடக அரசு அந்த மாநிலங்களின் அனுமதியைப் பெற்றுள்ளதா? மத்திய அரசிடம் உள்ள இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய…

Read More

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்றும் (ஜூலை 28) நாளையும் (ஜூலை 29) மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் 30-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில…

Read More

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட “நல்ல வாய்ப்புகள் இருப்பதாக” அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 13 நாட்களாக ஈரானின் ஹார்முஸ் நீரிணை முற்றுகை விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளன. இந்த அமைதி சூழலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிச்சிகனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தனக்கு மிகுந்த பொறுமை உண்டு என்றும் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நல்ல முடிவு எட்டப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், நாங்கள் மீண்டும் பழையபடி செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தார். மேலும், ஈரான் தரப்பு தங்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர்களைத்…

Read More

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜமைக்காவின் ரோமைன் பெக்போர்ட் என்பவரும் 2.25 மீட்டர் உயரத்தையே தாண்டினார். இருப்பினும், முயற்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஜமைக்கா வீரருக்கு தங்கப் பதக்கமும், சர்வேஷ் குஷாரேவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான சர்வேஷ் குஷாரே, சிறு வயது முதலே பல்வேறு நிதி நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு தடகளப் பயிற்சி பெற்றவர். கடந்த 2022 காமன்வெல்த் போட்டிகளில் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தநிலையில், தற்போது சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் புதிய…

Read More