Close Menu
    What's Hot

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
    Featured

    டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியின் போது நிகழ்ந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேர் கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், அதில் 101 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் டெல்லி காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கியது. சுமார் 20 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த இப்போராட்டம், கடந்த ஜூலை 20 அன்று வன்முறையாக மாறியது.

    நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுமாறு CJP விடுத்த அறிவிப்பையடுத்து, ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    வன்முறையில் ஈடுபட்ட 2,873 பேரிடம் டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்ட மற்றும் விசாரிக்கப்பட்ட நபர்களில் 989 பேருக்கு கொடூரமான குற்றங்களில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 101 பேர் மீது ஏற்கெனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    62 பேர் கொலை முயற்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். 284 பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள். 229 பேர் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகளில் சிக்கியவர்கள். 19 பேர் மீது ஆட்கடத்தல் வழக்குகளும், 6 பேர் மீது போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளன. குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மீது கைது மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?
    Next Article காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 
    Editor web1
    • Website

    Related Posts

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    July 28, 2026

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    July 28, 2026

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

    ‘ஜனநாயகன்’ 5 நாளில் வசூல் இவ்வளவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.