Author: Editor web1

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்றும் (ஜூலை 26) நாளையும் (ஜூலை 27) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 – 38° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29° செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40…

Read More

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானுக்கு ரஷ்யா உளவு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தகவல்களை வழங்கி உதவி வருவதாக உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ஜூலை தொடக்கத்தில் இருந்து வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ரஷ்யா தனது செயற்கைக்கோள்கள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தரவுகள் ஈரானுக்குப் பகிரப்பட்டு, அதன்மூலம் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். பஹ்ரைன், ஜோர்டான், குவைத் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்த ரஷ்யாவின் இந்த உளவுத் தகவல்களே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஸ்பியன் கடல் பகுதியில் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையே சட்டவிரோதமாக ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், ரஷ்யா- ஈரான் ராணுவக்…

Read More

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையேயான 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இளம் வீரர் சூர்யவன்சியின் அதிரடியான ஆடி 81 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 192 ரன்கள் குவித்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாவே அணி  157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.…

Read More

தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், உயர்மட்ட சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்ட அலையை ஏற்படுத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலைக்கு தள்ளியது. இதையடுத்து, தேர்வு சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கையை பிரதமர் மோடி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பிரபல தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகணி தலைமையில்  தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலமே தங்களின் முதன்மை முன்னுரிமை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் விரைவில் நடைபெறவுள்ள தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Read More

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்து வரும் புதிய காதல் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மணிரத்னம் தனது புதிய திரைப்படத்திற்காகக் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் நள்ளிரவு 1:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை தீவிரப் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். இப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்திற்காகக் கொல்கத்தா ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம், சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்குத் தனது குழுவுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். கொல்கத்தாவின் ஹவுரா பாலம், குமார்த்துலி, பார்க் ஸ்ட்ரீட் மற்றும் பெல்காச்சியா ராஜ்பாரி ஆகிய முக்கியப் பகுதிகளில் சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக…

Read More

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தனக்கு தேசிய விருது கிடைக்காதபோது யாரும் பேசவில்லை என்றும் தற்போது கிடைத்த விருதுக்கு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் வரும் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தனது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் கலந்து கொண்டார். விழாவில், ரசிகர்களின் மத்தியில் பேசிய  தனுஷ், தனக்குக் கிடைத்த தேசிய விருதுகள் குறித்த விமர்சனங்களுக்கு உருக்கமாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார். தனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தற்போது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும்,  கடந்த ஆண்டில் வெளிவந்த சில திரைப்படங்கள் நிச்சயமாகச் சிறந்த படங்கள் தான் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இன்று எனது விருதை எதிர்த்து கிட்டத்தட்ட 90% பேர் பேசுவதாகவும், ‘அது ஒரு கனாக்காலம்’, ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’,…

Read More

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளன. 74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில், இன்று (ஜூலை 26) நடைபெற்ற 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்தா சிங் பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 121 கிலோ எடையைத் தூக்கிப் புதிய காமன்வெல்த் சாதனையை அவர் பதிவு செய்தார். ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 143 கிலோ எடையைத் தூக்கினார். ஒட்டுமொத்தமாக 264 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இப்போட்டியில் மலேசியாவின் முகமது அனிக் கஸ்தான் (273 கிலோ) தங்கப் பதக்கத்தையும், கென்யாவின் ஜோஷூவா அமுங்கா (260 கிலோ)…

Read More

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் உள்ள இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். உலகப் புகழ்பெற்ற அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று, சுவாமியையும், அம்பாளையும் தரிசித்து செல்கின்றனர். இந்தநிலையில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் என்ற பக்தர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ‘இடுக்கு பிள்ளையார்’ கோயிலுக்குச் சென்ற மணிக்குமார், வழக்கப்படி இடுக்கின் வழியே நுழைந்து சென்று பிள்ளையாரை தரிசனம் செய்ய முயன்றார். அப்போது, அவரது உடல் பருமன் காரணமாக இடுக்கில் இருந்து வெளியே வர முடியாமல் பாதியிலேயே சிக்கிக் கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வர முடியாமல் தவித்த அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, உடன் வந்தவர்களும் அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து அவரை மீட்டு,…

Read More

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி தந்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டுமென கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, கர்நாடக– தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் தேவா, மேகதாது அணைத் திட்டம் விவசாயத்திற்கான திட்டம் அல்ல. ஆசியாவிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பெங்களூரு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 1.5 கோடி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம் என்றார். அந்தப் பகுதியில் ஏராளமான தமிழ் மக்களும் வசிப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தமிழகத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்ட போது,…

Read More

திமுகவை வழித்த தகுதி உள்ளதாக என்பதை உதயநிதி ஸ்டாலின் சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், திமுக சார்பில் நடைபெறும் நீட் போராட்டங்களில் இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து அமர வைப்பதாகக் குற்றம்சாட்டினார். “உதயநிதிக்கு ‘Gen-Z’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் அவரை யாரோ தவறாக வழிநடத்துவதாகவும், இதுபோன்ற கோமாளித்தனமான செயல்களை விட்டுவிட்டு, திமுகவை வழிநடத்தத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று உட்கட்சி வாக்கெடுப்பு நடத்தி உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தினார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் 100% அர்ப்பணிப்போடு சட்டரீதியாகவும், நேரடியாகப் பேசியும் தீர்வு காண ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால்,…

Read More