Author: Editor web1
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள முடிவுக்கு, பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, இன்று (ஜூலை 25) தனது பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதுபற்றி பாஜக மூத்ததலைவர்கள் சமூக வலைதளத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் தெரிவித்துள்ள எக்ஸ் பதிவில், தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தியதில் தர்மேந்திர பிரதானின் பங்கு மிக முக்கியமானது. பொது நலனைக் கருதி அவர் எடுத்துள்ள இந்த ராஜினாமா முடிவு, பொது வாழ்வில் அவரது மிக…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் உறுதியாக நின்ற மாணவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின் போது மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தநிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே…
தமிழகத்திலும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்குவது மற்றும் பாமகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைவது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் ஸ்ரீகாந்தி மற்றும் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதலும் ஏற்பட்டது. இதையடுத்த அரசியல் நகர்வாக, பாமகவின் ராமதாஸ் அணியின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட்டது. தந்தை ராமதாசை அன்புமணி குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதையடுத்து, இருவருகிகும் சுமூகமாக சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், பாமகவை இனி அன்புமணி பார்த்துக் கொள்வார் என்று ராமதாஸ் அறிவித்தார். இந்தச் சூழலில், பாமகவில் நிலவும்…
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளது அற்புதமான நடவடிக்கை என்றும், இதனால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதகமும் ஏற்படாது, சாதகமே ஏற்படும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் கே.எம். காதர் மைதீன் தெரிவித்துள்ளார். திருச்சி பாலக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மைதீன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மைதீன், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்து வருவதாகவும், வரவிருக்கும் உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிப்போம் என்றும் கூறினார். இடப்பங்கீடு குறித்து தவெக தலைமையுடன்…
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். டேங்க் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது இன்று (ஜூலை 24) தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நபர், பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கியிருந்த சோதனைச் சாவடியை நோக்கி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து வந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 12 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 3 பேர் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், சில பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனப்படும்…
மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சராகப் பணியாற்றி வந்த ரவ்நீத் சிங், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், ரவ்நீத் சிங்கின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75(2) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாகப் பணியாற்றவும், மாநில அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தவும் ரவ்நீத் சிங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. மத்திய அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு மீண்டும் மாநிலங்களவை வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், தனது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள அவர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பெயந்த் சிங்கின் பேரனான…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, 47 என்.டி.ஏ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேர்வு முகமையின் செயல்பாடுகளைச் சீரமைக்கும் நோக்கில், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் 47 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீக்கப்பட்டதாக கூறப்படும் அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமன்றி, கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என தெரிகிறது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் பல நாட்களாக மாணவர்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டத்தில்…
தமிழகத்தில் வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும், அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்திலும் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், வளிமண்டல மாற்றங்கள் காரணமாகவும் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்று கணித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போதுமான…
டெல்லியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இணைய சேவை முடக்கங்களுக்கு இடையே, இணைய சேவை இல்லாமல் செயல்படும் தகவல் பரிமாற்ற செயலியான ‘பிட்சாட்’-க்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘பிட்சாட்’ என்பது ட்விட்டர் (தற்போது X) இணை நிறுவனர் ஜாக் டோர்சியால் உருவாக்கப்பட்ட, இணையம் மற்றும் வை-பை வசதி இல்லாமலேயே இயங்கக்கூடிய ஒரு செயலியாகும். இது ‘புளூடூத் மெஷ்’ (Bluetooth mesh) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அருகிலுள்ள செல்போன்களுக்கு இடையே நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது. இந்தநிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டங்களின் போது, அரசு அடிக்கடி இணைய சேவையைத் துண்டித்ததால், போராட்டக்காரர்கள் இந்த பிட்சாட் செயலியைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’, இந்தச் செயலியைத் தங்கள் வலைதளத்தில் ஹோஸ்ட் செய்திருந்த ‘கிட்ஹப்’ நிறுவனத்திற்கு, அதற்கான 3 ரெபாசிட்டரிகளை உடனடியாக முடக்க…
டெல்லியில் CJP சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்தநிலையில், பெல்லட் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட சாஹில் என்ற இளைஞருடன் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அவருடைய முகம், கழுத்து, கைப் பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அமைதியாக போராடிய இந்த இளைஞரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல் குறிப்பிட்டார். தேசத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இதனிடையே பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல்களை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களிடம்…