Author: Editor web1
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய கௌரவம் அளிக்கும் வகையிலும், அதை அவமதிப்பதைத் தடுக்கும் நோக்கத்திலும், ‘தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026’ மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) அறிமுகப்படுத்தப்பட்டது. 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ, அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டுமான தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாகவும், அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு…
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இளைஞர்களுக்கு ஆதரவாக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்படைப்பாளிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மம்மூட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இளைஞர்களே நம் நாட்டின் உண்மையான செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள். அவர்களைப் பாதுகாத்திடுங்கள். அவர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் என…
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகத் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் செல்ல முயன்ற ‘இந்தியா’ கூட்டணி எம்பி-க்களின் போராட்டத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், CJP கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்பி-க்கள் டெல்லியில் காந்தி நினைவிடம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். பேரணிக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறி, டெல்லி காவல்துறையினர் வழியெங்கும் தடுப்புகளை அமைத்து ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி எம்பி-க்களின் போராட்டத்தைக் கார்டன் வீதியில் தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நீட் வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், அமைதியான முறையில் பேரணி நடத்த முயன்ற எம்பி-க்களைத் தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்திற்கு…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இப்படத்தின் புதுப் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முழுப் பாடல் வரும் 25ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தெரிவித்துள்ளது. சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அமெரிக்கா உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் எண்ணெய் விற்க முடியாது என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சாளருமான முகமது பாகர் காலிபாஃப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போரின் சமன்பாடு மிகத் தெளிவானது என குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாம் அல்லது எதுவும் இல்லை என கூறியுள்ள அவர், நாங்கள் எண்ணெய் விற்க முடியாத பிராந்தியத்தில், வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாது என எச்சரித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். அதற்குப் பதிலடியாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால்,…
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஹராரேவில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 125 ரன்கள் எடுத்தது. மத்வீர் 39 ரன்களும், மருமானி 27 ரன்களும் எடுத்தனர். மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்தியாவுக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்திய அவர்,…
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினருடன் (CJP) பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். சிஜேபி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சரின் அலுவலகத்திற்கோ அல்லது அவரது இல்லத்திற்கோ எந்த நேரத்திலும் வரலாம் என்று மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜெ.ஜி.நட்டா, மாணவர்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உண்ணாவிரத போராட்டம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நட்டாவை ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி வலிக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில்…
நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் சென்னையில் தமிழ்த் திரைக்கலைஞர்கள் கண்டனப் போராட்டம் நடத்தி உள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (CJP) சார்பில் நாடாளுமன்றத் நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். டெல்லியில் தாக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு நாட்டில் மாணவர் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம் என தெரிவித்தார். மாணவர் போராட்டம் என்பது, அரசின் தோல்வியாக உள்ளது குறிப்பிட்ட அவர், நீட்-ன் தாக்கம்…
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (ஜூலை 24) நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (CJP) அழைப்பு விடுத்துள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்திற்கு எதிராகத் டெல்லியில் சிஜேபி அமைப்பினரும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தினர். சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 20ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இந்தநிலையில், நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் முறைகேட்டைக் கண்டிப்பதுடன், அமைதியாகப் போராடி காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. செங்கடலின் பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது ஜூலை 23ல் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து 12 நாட்களாக ஈரானிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. செங்கடல் பகுதியில் சவுதி கப்பல்கள் மீதான தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுதிகள் நேரடியாகப் போரில் களமிறங்கியுள்ளதால்,…