Author: Editor web1
இந்திய ஹஜ் குழு சார்பில் 2027-ம் ஆண்டுக்கான (ஹிஜிரி 1448) புனித ஹஜ் பயணத்திற்குச் செல்ல விரும்பும் ஆன்மிகப் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில ஹஜ் குழுக்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 24, 2026 (இரவு 11:59 மணி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு எந்தச் சூழ்நிலையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பயணிகள் hajcommittee.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது HAJ SUVIDHA செயலி (App) மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்ப அவகாசம் முடிந்ததும், ஜூலை 30, 2026 அன்று காலை 11:00 மணிக்கு கணினி மூலம் குலுக்கல் முறை தேர்வு நடைபெறும். இந்த நிகழ்வு இந்திய ஹஜ்…
வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் நாம்சி மாவட்டம், ஜொலுங்கே நகருக்கு உட்பட்ட சமர்டங் பகுதியில் புதிதாக சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் நாம்சி மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), சிக்கிம் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கினர். சுரங்க இடிபாடுகளுக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டநிலையில், 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. பலியானவர்களின் உடல்கள் கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக…
நீட் உள்ளிட்ட தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் நிகழ்ந்த தடியடி சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கலைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க துணை ராணுவப் படையினர்…
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல்…
நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட முற்றுகைப் பேரணியில் நிகழ்ந்த தடியடி சம்பவத்தில் 178 பேர் காயமடைந்துள்ளதாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாக புறப்பட்டு போராட்டத்தை நடத்தினர். தடை உத்தரவு மற்றும் பாதுகாப்பு தடைகளை மீறிப் பேரணியாகச் செல்ல முயன்றதால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு நாடாளுமன்றம் நோக்கி முன்னேற முயன்றதால், அவர்களைக் கட்டுப்படுத்தப் காவல்துறையினர் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் தடிஅடி நடத்தினர். கூட்டத்தைக் கலைக்கக் பல இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த வன்முறை மற்றும் தடிஅடியில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்…
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் மீது 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் வாகன ஏற்றுமதி ஆகியவற்றிற்கு எதிராகக் கனடா பாரபட்சமான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், அமெரிக்க வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பின் கீழ் பால் பொருட்கள், மதுபானங்கள், சிமெண்ட், ஆடைகள், தளவாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும். இருப்பினும், எரிசக்தி, உரம், மீன் வளம் மற்றும் முக்கிய தாதுக்கள் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1930-ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டப் பிரிவு 338-ன்…
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தூத்துக்குடி மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய பின்னர், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை ஆகஸ்ட் 4-ம் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்…
முதலமைச்சர் விஜய், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் குறைகளைக் களைவதற்காகத் தொடங்கிய பிரத்யேக இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தொகுதி மக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். இதில் பதிவாகும் புகார்கள் நேரடியாக நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளத்தில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே காட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கமளித்த தவெக பெரம்பூர் மாவட்டச் செயலாளர் சிவா, “இந்த இணையதளம் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 7 வார்டு மக்களின் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதில் தங்களது புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட அதிகக் நெரிசல் காரணமாக இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களைப்…
கிருஷ்ணகிரி அருகே மதுபாட்டிலுக்குப் பணம் குறைவாகக் கொடுத்ததைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த 2 இளைஞர்கள் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை (கடை எண்: 2150) இயங்கி வருகிறது. இக்கடையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி (50) விற்பனையாளராகவும், கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (58) விற்பனை உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியமூர்த்தி (27) மற்றும் லைன்கொல்லையைச் சேர்ந்த திருமால் என்ற நித்தீஷ்குமார் (25) ஆகிய இரு இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 30 ரூபாய் குறைவாகக் கொடுத்து 2 பீர் பாட்டில்களை வாங்கியதாக தெரிகிறது. மீதிப் பணத்தை அடுத்த முறை தருவதாகக் கூறிவிட்டுச் சென்றனர். சற்று நேரம் கழித்து மீண்டும் போதையில் வந்த அவர்கள், இந்த முறை 40 ரூபாய்…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் பலவீனமான தென்மேற்கு பருவமழை சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றாலும், உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர், கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் மதுரை உள்ளிட்ட சுமார் 19 உள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம்…