Author: Editor web1
காவிரி விவகாரத்தில் அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபட வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவையும் பாதித்து – சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் உள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வருவது, காவிரி டெல்டா விவசாயிகளைப் பேரிடரில் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 28.3 டி.எம்.சி காவிரி நீரில் இதுவரை 3.4 டி.எம்.சி மட்டுமே திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதியும் திறக்க இயலவில்லை. ஜூன் 23 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அணைகளில் உள்ள நீரைக் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள், என்று ஆணையம் அறிவுறுத்தி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறப்பது குறித்த முடிவை ஜூலை…
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இன்று (ஜூலை 23) முதலாவது டி20 போட்டியில் அந்நாட்டு அணியை எதிர்கொள்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஹராரேவில் நடைபெற உள்ளது. இன்று தொடங்கி, ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை (அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் தோல்வி). இதனால், இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, கடும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குகிறார். அணியில் ஐபிஎல் மற்றும் இளையோர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். கடந்த தொடர்களில் சூர்யவன்ஷி எதிர்பார்த்த அளவு சோபிக்காத நிலையில், இந்தத் தொடர் அவருக்கு…
விளையாட்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 23-வது காமன்வெல்த் விளையாட்டு விழா, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இன்று (ஜூலை 23) தொடங்கி, ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்குகின்றன. தொடக்க விழாவில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமை, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லவ் லினா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 74 நாடுகளில் இருந்து சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3×3), ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங், ஜூடோ, நெட்பால் மற்றும் பவுல்ஸ் ஆகிய 10 விளையாட்டுகளில் மொத்தம் 215 பந்தயங்கள் நடைபெற உள்ளன. இதில் பாரா பிரிவினருக்கான…
மத்திய டெல்லியின் சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 20-ம் தேதி, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று (ஜூலை…
உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாக உள்ளநிலையில், திரைப்படத்தை முதலமைச்சர் விஜய் பார்த்து ரசித்தார். சென்னை அடையாறில் உள்ள புகழ்பெற்ற எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்திற்கு (தாகூர் திரைப்படக் கல்லூரி) நேரில் சென்று, அங்கு திரையிடப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். இந்தாண்டு பொங்கல் பண்டிகை மற்றும் முழுமையான அரசியல் பணி காரணமாக விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் விவகாரம் காரணமாக திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். விஜய் அரசியலில் முழுமையாகக் களம் இறங்கி முதல்வரான பிறகு திரைக்கு வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களிலும் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாக உள்ளநிலையில்,…
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தணிக்கை வாரியத்தின் பல்வேறு இழுபறிகளுக்குப் பின் இப்படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டு, ஜூலை 23-ம் தேதி திரைக்கு வரும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத் திரையரங்குகளில் ரசிகர்கள் பாலாபிஷேகம், பட்டாசு வெடித்தல் மற்றும் பேனர்கள் அமைத்துத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், அரசியலில் முழுமையாகக் களம் இறங்கி முதல்வரான பிறகு திரைக்கு வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களிலும் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் முதல்…
செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் கலக்கி வருகிறது. 2022-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் இரண்டாம் பாகம், திரையரங்குகளில் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவெடுத்துள்ள இத்திரைப்படம், உலகளவில் ரூ.55 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் மூலம், விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே மிக அதிக வசூல் செய்த திரைப்படமான ‘ராட்சசன்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது கரியரிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ‘கட்டா குஸ்தி 2’ பெற்றுள்ளது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வார இறுதி…
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகமாடுவதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டி உள்ளது. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கட்சி (CJP) நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, CJP அமைப்பின் போராட்டத்தை பலவீனப்படுத்தவே பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் இணைந்து இந்த நாடகத்தை ஆடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. CJP போராட்டத்தின் போது காவல்துறையினரின் தடியடியால் காயமடைந்து ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் இல்லம் முன்பாக திடீரென…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தப்பட்ட 6 மணி நேரத் தீவிர விசாரணை நிறைவடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நில மோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவின்படி, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார், அன்றைய காலகட்டத்தில் பணியில் இருந்த அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் மற்றும் மோதல் போக்குக்கு இடையே, பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக ஈரானின் உயர் மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஈரானிய உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமேனி தலைமையிலான உயர் மட்டத் தூதுக்குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தது. அங்கு அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் நிலவரம், தாக்குதல்களை நிறுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு சார்ந்த முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சியால் அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த மாதம் 60 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் அமெரிக்கா- ஈரான் இடையில் நிரந்தர…