Author: Editor web1

வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று (ஜூலை 24) தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமதுவிடம் சமர்ப்பித்தார். அதிபர் ஷஹாபுதீன் (76) தனது ராஜினாமா கடிதத்தில், தனக்கு இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் ‘அட்டானாமிக் நியூரோபதி’ உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகள் உள்ளதாகவும், இதன் காரணமாகத் தன்னால் கடமைகளை நிறைவேற்ற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ஷஹாபுதீனின் ராஜினாமா, வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த மே மாதம் லண்டனில் மருத்துவ சிகிச்சைக்காக அதிபர் ஷஹாபுதீன் இருந்தபோது அவருடன் தொலைபேசியில் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போதைய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னரே அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஷேக் ஹசீனாவுடனான தொலைபேசி உரையாடல் குறித்த செய்திகளை அதிபர் ஷஹாபுதீன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது…

Read More

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நாளையும் (ஜூலை 25) தொடரும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது. ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தியது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது போன்ற சம்பவங்களால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி (CJP) அமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சுமார் இரண்டு மணி நேரம்…

Read More

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது. ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தியது, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது மற்றும் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது குறித்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக, ஜூலை 22 அன்று இதுதொடர்பான அவசர விசாரணை கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் நிராகரித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க வேண்டாம்…

Read More

அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்து இயக்குனர் எச்.வினோத் மனம் திறந்து தெரிவித்துள்ளார். 2022ல் அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் எச்.வினோத், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதற்கான காரணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு வராத ஒன்றை வலிந்து செய்யப்போய் இப்படி ஆகிவிட்டது” என்று வினோத் ஒப்புக்கொண்டுள்ளார். விஸ்வாசம் போன்ற குடும்பப் படங்களை இயக்குவது தனது பாணி இல்லை என்றும், ஆனால் அஜித்தின் குடும்ப ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆக்‌ஷன் மற்றும் சமூகக் கருத்துகளை ஒரே படத்தில் சமன் செய்ய முயன்றது சரியாக அமையவில்லை என்றும் வினோத் குறிப்பிட்டுள்ளார். படத்தின் மிக முக்கியமான தோல்விக்கு, சரியான கலவையில் சரியான திரைக்கதை அமையாமல் போனதே காரணம் என்று…

Read More

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு, மேற்காசியப் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று தொடர்ந்து 5-வது நாளாக சரிவைச் சந்தித்தன. காலை வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 916.96 புள்ளிகள் சரிந்து 75,474.43 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 331.62 புள்ளிகள் சரிந்து 76,059.77 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 102.15 புள்ளிகள் சரிந்து 23,767.45 புள்ளிகளாக நிலைபெற்றது.  வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுப்பதிலும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டது சந்தையில் எதிரொலித்தது. தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,999.23 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அமெரிக்கா தனது வர்த்தகக் கொள்கைகளில் கொண்டு வரவுள்ள புதிய வரி விதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள், சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.…

Read More

இந்திய டி20 அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஒரு தனித்துவமான சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்தநிலையில், ஹராரேவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்போவே அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்ற போது, புதிய சாதனை ஒன்றை படைத்தார். டி20 போட்டிகளில் அதிக முறை டாஸ் வென்ற இந்திய கேப்டன்களின் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் முதலிடம் பிடித்தார். கடந்த ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளிலும், இங்கிலாந்து எதிரான 5…

Read More

நாடு முழுவதும் பல்வேறு பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூலை 24) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ‘பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைத் தடுப்பு) சட்டம், 2024’-ல் கூடுதல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தற்போதுள்ள தண்டனைகளை விட கூடுதல் சிறைத்தண்டனை மற்றும் பெருந்தொகை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்குத் தேர்வுகள் எழுத வாழ்நாள் தடை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தவும் இந்த மசோதாவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதாவை வருகின்ற திங்கட்கிழமை (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு…

Read More

சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமை கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பாக, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்ற அனுமதி கோரி விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்காக, வருவாய் துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிமன்றம், அவர் ஜூலை 31-ம் தேதி நேரில் ஆஜராகி இது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சீமை கருவேலம் மரங்களை முழுமையாக…

Read More

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘தி ஒடிசி’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை 17-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ‘தி ஒடிசி’ வெளியானது.  வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக, இந்தியாவில் இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் மிக வெற்றிகரமான ஹாலிவுட் படமாக இது உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ.20.76 கோடி வசூலித்தது. ஐமேக்ஸ் மற்றும் 3டி திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வசூல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ஓப்பன்ஹைமர்’ படத்திற்குப் பிறகு, கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய மற்றொரு திரைப்படமாக ‘தி ஒடிசி’ இணைந்துள்ளது. இப்படத்தில் மேட் டாமன் ஒடிசியஸாகவும், ஆன் ஹாத்வே பெனிலோபியாகவும்…

Read More

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றும் (ஜூலை 24) எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும், டெல்லியில் இளைஞர்கள்  மீதான தடியடி சம்பவம் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதன் மூலம், மக்களவை தொடர்ந்து 5-வது நாளாக எந்தவித அலுவல் பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளது. இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட ‘இண்டி’…

Read More