Close Menu
    What's Hot

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா! அரசியல் அழுத்தமா?
    Featured

    வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா! அரசியல் அழுத்தமா?

    Editor web1By Editor web1July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று (ஜூலை 24) தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமதுவிடம் சமர்ப்பித்தார்.

    அதிபர் ஷஹாபுதீன் (76) தனது ராஜினாமா கடிதத்தில், தனக்கு இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் ‘அட்டானாமிக் நியூரோபதி’ உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகள் உள்ளதாகவும், இதன் காரணமாகத் தன்னால் கடமைகளை நிறைவேற்ற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் ஷஹாபுதீனின் ராஜினாமா, வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த மே மாதம் லண்டனில் மருத்துவ சிகிச்சைக்காக அதிபர் ஷஹாபுதீன் இருந்தபோது அவருடன் தொலைபேசியில் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போதைய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னரே அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஷேக் ஹசீனாவுடனான தொலைபேசி உரையாடல் குறித்த செய்திகளை அதிபர் ஷஹாபுதீன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    வங்கதேச அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்புகளை கவனிப்பார். அடுத்த 90 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சிக்குப் பிறகு, ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்டு, தற்போதுள்ள புதிய அரசு பொறுப்பேற்ற சூழலில், முந்தைய ஆட்சியின் அடையாளமாகத் தொடர்ந்த ஒரே நபர் அதிபர் ஷஹாபுதீன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த திடீர் ராஜினாமா, வங்கதேசத்தின் அரசியல் மாற்றங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை தொடரும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல்
    Next Article டெல்லி போராட்டம்: பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!
    Editor web1
    • Website

    Related Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    July 24, 2026

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    July 24, 2026

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    டெல்லி போராட்டம்: பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.