Author: Editor web1
சிவகாசி அருகே சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளநிலையில், 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இன்று (ஜூன் 26) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இந்தநிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, கீழ திருத்தங்கல் பகுதியில் முறையான அனுமதியின்றி தகர செட் அமைத்து…
டிஜிட்டல் சந்தைச் சட்டங்களை மீறியதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஐரோப்பிய யூனியன் மீது பதில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில், தனது சொந்தச் சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பிற நிறுவனங்களின் போட்டியைக் கட்டுப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக 890 மில்லியன் யூரோ (சுமார் 1 பில்லியன் டாலர்) அபராதம் விதித்தது. கூகுள் தனது இந்த நடைமுறைகளை 60 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தவறினால் அதன் சராசரி தினசரி வருவாயில் 5% வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள…
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்டியூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மமிதா பைஜுவின் நடனத்தில் வெளியான இப்பாடல் அதன் ஹூக் ஸ்டெப்பிற்காக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலை சூர்யாவே பாடியுள்ளார். ‘ரெட்ரோ’ படத்தில் ‘லவ் டிடாக்ஸ்’ பாடலைப் பாடிய அவர், தற்போது மீண்டும் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்காக மைக் பிடித்துள்ளார். இந்தப் பாடலுக்கான வரிகளை தனுஷின் ‘அசுரன்’ பட புகழ் மற்றும் ‘யூத்’ படத்தின் இயக்குநரான கென் கருணாஸ் எழுதியுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கான வாழ்த்துகளையும், வாழ்வியல் கருத்துகளையும் கொண்டாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. குடும்பப் பாங்கான…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் பிரகலாத் ஜோஷியிடம், கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடக…
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 81 ரன்களும், திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்களும் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. 220 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் ஆடிய ஜிம்பாப்வே அணி,…
நீட் விவகாரம் தொடர்பாக CJP போராட்டத்தையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி, ராஜீவ் சௌக், படேல் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி உள்ளிட்ட மத்திய டெல்லி பகுதியில் உள்ள 18 மெட்ரோ இரயில் நிலையங்களை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்காலிகமாக மூடியிருந்தது. இதனால் அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தநிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் போராட்டக் குழுவினர்…
காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்க பெங்களூர் செல்லும் முன்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்தின் நிலைப்பாடு மற்றும் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன் மாநிலத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. மாநிலத்தின் ஒருமித்தக் குரலாகவும் வலிமையான கோரிக்கையாகவும் பேச்சுவார்த்தை அமைய அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் முதலமைச்சர் கேட்டறிய வேண்டும் என்று அறிக்கையில் எடப்பாடி…
மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான 6 நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டார். மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். மால்டோவா அதிபர் மாயா சாண்டு மற்றும் வடக்கு மாசிடோனியா அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவா ஆகியோரை நேரில் சந்தித்த திரௌபதி முர்மு, இருதரப்பு உறவுகள், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் ருமேனியாவிற்கு பயணம் செய்தார். அங்கு அந்நாட்டு அதிபர் நிகுசோர் டான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து அவர் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் போது, மூன்று நாடுகளிலும் நடைபெற்ற வர்த்தக மன்றக் கூட்டங்களில் உரை நிகழ்த்திய குடியரசுத்…
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான காட்டுத்தீ பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2.70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், அவிலா, குவாதலஹாரா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதேபோல பிரான்சின் கேப் பிரெட், பிஸ்காரொஸ், கிரோண்டி, லெண்டிஸ் மற்றும் பிரொடொக்ஸ் ஆகிய நகரங்களிலும் காட்டுத்தீயின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இந்த பேரழிவு காட்டுத்தீயில் சிக்கி ஸ்பெயினில் 13 பேரும், பிரான்சில் 2 பேரும் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சுமார் 2,70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான முகாம்களிலும் அண்டை நகரங்களிலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அரசுகள் ராணுவத்தைக் களமிறக்கியுள்ளன. நிலப்பரப்பில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில்,…
லட்சக்கணக்கான மாணவர்களின் போராட்டத்தால் வெற்றி கிடைத்துள்ளதால், என்னை யாரும் ஹீரோவாக சித்தரிக்க வேண்டாம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘போராட்டத்தை வெற்றி பெற வைத்து நாட்டின் புதிய ஹீரோவாக அவதரித்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அபிஜீத் தீப்கே, தயவுசெய்து என்னை தனிப்பட்ட முறையில் ஹீரோவாக ஆக்க முயற்சிக்காதீர்கள். இந்த நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் ஒரு தனிநபரை ‘ஹீரோ’வாக உயர்த்திப் பிடித்ததன் விளைவைத்தான் இன்று வரை இந்த நாடே அனுபவித்துக் கொண்டிருக்கிறது” என்றார். “இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல. கடந்த சில நாட்களாக வீதியில் இறங்கி போராடிய…