Close Menu
    What's Hot

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
    உலகம்

    கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    Editor web1By Editor web1July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 30
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிஜிட்டல் சந்தைச் சட்டங்களை மீறியதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஐரோப்பிய யூனியன் மீது பதில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில், தனது சொந்தச் சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பிற நிறுவனங்களின் போட்டியைக் கட்டுப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக 890 மில்லியன் யூரோ (சுமார் 1 பில்லியன் டாலர்) அபராதம் விதித்தது. கூகுள் தனது இந்த நடைமுறைகளை 60 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தவறினால் அதன் சராசரி தினசரி வருவாயில் 5% வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து முன்னணி அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்றவற்றை இலக்கு வைத்து நியாயமின்றி அபராதம் விதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    அமெரிக்கா என்பது ஐரோப்பாவிற்கான பணப் பெட்டி அல்ல என்று  தெரிவித்துள்ள அவர், அமெரிக்க நிறுவனங்களையும், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தையும் கொள்ளையடிக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக ‘301 விசாரணை’ தொடங்கப்படும் என்றார். இந்த அபராதங்கள் ரத்து செய்யப்படவில்லையெனில் ஐரோப்பிய ஒன்றியம் மீது கடுமையான இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி போராட்டத்தில் அதிரடிப்படையின் விதிமீறல்கள்: புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு!
    Next Article சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!
    Editor web1
    • Website

    Related Posts

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    July 26, 2026

    3 ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

    July 25, 2026

    பிரான்ஸ், ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத்தீ: 15 பேர் பலி; 2.70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    டெல்லி போராட்டத்தில் அதிரடிப்படையின் விதிமீறல்கள்: புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.