Close Menu
    What's Hot

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    தொகுதி மறுவரையறையால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆபத்து!. சில எதிர்க்கட்சிகள் ஆதரவு!. துரை வைகோ எம்.பி. பேட்டி!. 

    விவசாயிகளுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும்!. விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!
    Featured

    தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

    Editor web3By Editor web3August 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vikram Mubayi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா  மலைப்பகுதியில் தனியாக மலையேற்றத்திற்குச்  சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழந்தவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பயின்று வந்த விக்ரம் முபாயி (Vikram Mubayi) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்யோ தேசிய வனப்பகுதியில் (Inyo National Forest) உள்ள பிக் பைன் லேக்ஸ் (Big Pine Lakes) பகுதிக்கு விக்ரம் தனியாக மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் அவர் கடைசியாகத் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு அவரைக் காணவில்லை.

    இதனையடுத்து, இன்யோ கவுண்டி மீட்புக் குழுவினர் மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், விக்ரம் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இதில் எவ்வித சந்தேகத்திற்குரிய செயல்களும் நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலும், அதிகாரிகளால் பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.

    சிறுவயது முதலே விளையாட்டு மற்றும் இயற்கையின் மீது அதீத ஆர்வம் கொண்ட விக்ரம், புவி வெப்பமடைவதைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவதைத் தனது எதிர்கால லட்சியமாகக் கொண்டிருந்தார். ஒரு சிறந்த மாணவராக மட்டுமின்றி, புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் நோக்கில் சுமார் 4,500 மைல்கள் நெடிய சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    dead in California Indian-origin student Sierra Nevada solo hiking trip Vikram Mubayi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்!
    Next Article விவசாயிகளுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும்!. விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026

    தொகுதி மறுவரையறையால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆபத்து!. சில எதிர்க்கட்சிகள் ஆதரவு!. துரை வைகோ எம்.பி. பேட்டி!. 

    August 9, 2026

    விவசாயிகளுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும்!. விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    தொகுதி மறுவரையறையால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆபத்து!. சில எதிர்க்கட்சிகள் ஆதரவு!. துரை வைகோ எம்.பி. பேட்டி!. 

    விவசாயிகளுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும்!. விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

    தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.