சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்டியூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மமிதா பைஜுவின் நடனத்தில் வெளியான இப்பாடல் அதன் ஹூக் ஸ்டெப்பிற்காக சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலை சூர்யாவே பாடியுள்ளார். ‘ரெட்ரோ’ படத்தில் ‘லவ் டிடாக்ஸ்’ பாடலைப் பாடிய அவர், தற்போது மீண்டும் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்காக மைக் பிடித்துள்ளார். இந்தப் பாடலுக்கான வரிகளை தனுஷின் ‘அசுரன்’ பட புகழ் மற்றும் ‘யூத்’ படத்தின் இயக்குநரான கென் கருணாஸ் எழுதியுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கான வாழ்த்துகளையும், வாழ்வியல் கருத்துகளையும் கொண்டாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.
குடும்பப் பாங்கான மற்றும் காதல்கதை களத்தைக் கொண்ட இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
