Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!
    Featured

    காவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!

    Editor web1By Editor web1July 25, 2026Updated:July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்க பெங்களூர் செல்லும் முன்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்தின் நிலைப்பாடு மற்றும் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன் மாநிலத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. மாநிலத்தின் ஒருமித்தக் குரலாகவும் வலிமையான கோரிக்கையாகவும் பேச்சுவார்த்தை அமைய அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் முதலமைச்சர் கேட்டறிய வேண்டும் என்று அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    முந்தைய காலங்களில் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் அவசரப்படாமல் அனைத்துக் தரப்புடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    #EdappadiPalaniswami #ADMK #CMVijay #CauveryIssue #Mekedatu #AllPartyMeeting #TNTalks
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3 ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
    Next Article CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.