Close Menu
    What's Hot

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!
    Featured

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Editor web1By Editor web1July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 23
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் குறைகளைக் களைவதற்காகத் தொடங்கிய பிரத்யேக இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தொகுதி மக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். இதில் பதிவாகும் புகார்கள் நேரடியாக நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளத்தில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே காட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இதுகுறித்து விளக்கமளித்த தவெக பெரம்பூர் மாவட்டச் செயலாளர் சிவா, “இந்த இணையதளம் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 7 வார்டு மக்களின் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதில் தங்களது புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட அதிகக் நெரிசல் காரணமாக இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்ய இயலவில்லை” என்று தெரிவித்தார்.

    மேலும், “பெரம்பூர் தொகுதி சார்ந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது பெரம்பூர் தொகுதி மக்கள் மட்டுமே புகார்களைப் பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் தீர்க்கப்பட்ட புகார்களின் புள்ளிவிவரங்கள் இணையதளத்தில் சரியாகப் புதுப்பிக்கப்படும்” என சிவா குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?
    Next Article விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    July 21, 2026

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    July 21, 2026

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழகத்தில் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.