Author: Editor web1

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 20) விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இது தொடர்பான நான்கு மனுக்களும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.  கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது, ராமர் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். அப்போது பக்தர்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாகக் கோயில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த வங்கிப் பணியாளர்கள் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச மாநில அரசு, மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக்…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில், தனியார் எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வால்பாறைக்குத் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி ஆழியார் சோதனைச் சாவடியில் தினசரி 500 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 750 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தவிர்க்கக் காவல்துறையினர் வளைவுகளில் விழிப்புணர்வுப் பலகைகளை வைத்து, பயணிகளை எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (23, தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் பூபாலன் (ஐடி நிறுவன ஊழியர்) ஆகிய இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ‘ஐயர்பாடி டிஸ்பென்சரி’ என்ற பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த இயற்கை எழிலைக் பார்த்து, புகைப்படம்…

Read More

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு சார்பில் இன்று (ஜூலை 19) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, அவையின் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இக்கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. அதேவேளையில், நீட் தேர்வு விவகாரம், ராமர் கோயில் நன்கொடை கையாடல் பிரச்சனை  உள்ளிட்ட…

Read More

ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி.வி. சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். டோக்கியோவில் ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூஃபீ (Chen Yufei)-ஐ சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சிந்து 15-10 என முன்னிலையில் இருந்தபோது, சென் யூஃபீக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாகப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். இதன் மூலம் சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஜப்பான் ஓபன் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய ஷட்லர் பி.வி. சிந்து ஆவார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு சென் யூஃபீக்கு எதிராகச் சிந்து பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.…

Read More

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 7வது நாளாகத் தனது வான்வழி மற்றும் கடற்படைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 7-வது நாளாகத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்கள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளின் தாக்குதல் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கண்காணிப்பு தளங்கள், ராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள், கடற்படைத் திறன்கள் ஆகியவை பிரதான இலக்குகளாக இருந்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பாலங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read More

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சுமூகமான முறையில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து விவாதிக்க, மத்திய அரசு நாளை (ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட, மத்திய அரசு நாளை (ஜூலை 19) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் மற்றும் முன்வைக்கப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 7 முக்கிய மசோதாக்களைத் தாக்கல்…

Read More

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, 15,000 பயன் தரும் நாட்டு மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மாநில தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து, மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள், பூங்காக்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகர் ராஜா குளத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு முதல் மரக்கன்றை நட்டு, திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வேம்பு, புங்கை, நாவல், நீர்மருது போன்ற நிழல் தரும் மற்றும் பயன் தரும் நாட்டு மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மொத்தமாக 15,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதன்…

Read More

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு அருள்மிகு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, இந்த ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வருகிற 27-ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க உற்சவ அம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோயில் கொடிமரம் அருகே அம்மன் எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் இசைக்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர். இந்தத் திருவிழாவில், நாளை முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, வரும் 27-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்குத்…

Read More

பெரம்பலூர் மாவட்டத்தில் 125 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களிடம், நாளொன்றுக்கு ரூ.50 வீதம் ‘கட்சி நிதி’ வசூலிப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (முன்பு 100 நாள் வேலைத்திட்டம்), தற்போது 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.450 வரை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.56,250 வரை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், இத்திட்டம் நிகழ்ந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தின் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பணித்தளத்திற்கு வரும் குறிப்பிட்ட சில நபர்கள், தொழிலாளர்களிடம் தினமும் தலா ரூ.50-ஐ ‘கட்சி நிதி’ என்ற பெயரில் கட்டாயமாக வசூலிப்பதாகக்…

Read More

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் மூலம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் (45) மற்றும் அவரது மனைவி காமாட்சி (35) ஆகிய இருவர் உதயகுமாரிடம் அறிமுகமானனர். தங்களிடம் 380 கிராம் தங்கக் கட்டிகள் இருப்பதாகக் கூறி, அதை விற்க உதவி கேட்டுள்ளனர். ஒரு கட்டியை உதயகுமாரிடம் கொடுத்து ஆய்வு செய்யச் சொல்லியுள்ளனர். உதயகுமார் அதைச் சோதித்தபோது, அது அசல் தங்கம் போலவே இருந்துள்ளது. இதனை நம்பிய உதயகுமார், அந்த தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது கடையில் இருந்த 6.5 பவுன் தங்க நகைகளையும், சரண்யாவிடமிருந்த 1 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். பிறகு முழுமையாகச் சோதித்தபோதுதான், அந்தத்…

Read More