Author: Editor web1

ஜோதிகா நடிப்பில் அண்மையில் வெளியான ‘சிஸ்டம்ஸ்’ (Systems) திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து, மும்பையில் உள்ள புகழ்பெற்ற தேவி மா கோயிலுக்குச் சென்று ஜோதிகா சுவாமி தரிசனம் செய்துள்ளார். இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘சிஸ்டம்ஸ்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாகவும், இறைவனின் ஆசி பெறவும் ஜோதிகா இந்த கோயில் தரிசனத்தை மேற்கொண்டார். கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஸ்வினி ஐயர் திவாரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படக்குழுவினரின் இந்த ஆன்மிக பயணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார். பெங்களூருவில் உள்ள லோக் பவனில் இருக்கும் கண்ணாடி மாளிகையில் (Glass House) ஜூன் 3-ம் தேதி இதற்கான விழா நடைபெறுகிறது. இந்த தகவலை மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த சித்தராமையா, மே 28-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடத்தின் ஆலோசனையின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பதவியேற்பு விழாவை ஆடம்பரமாக நடத்தாமல், மிக எளிமையான முறையில், சேவை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது. பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, முதற்கட்டமாக 8 முதல் 10 அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 18-ம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்குப் பிறகு, கூடுதல் அமைச்சர்கள் பதவியேற்க…

Read More

வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அரிய வான்வெளி நிகழ்வான ‘புளூ மைக்ரோ மூன்’ (Blue Micro Moon) இன்று (மே 30) இரவு நிகழ உள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அதிசயத்தைக் காணப் பொதுமக்களும், வானியல் ஆர்வலர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். ஒரு ஆங்கில மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வந்தால், அதில் இரண்டாவதாக வரும் பௌர்ணமி ‘புளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மே மாதத்தில் மே 1-ம் தேதி முதல் பௌர்ணமி வந்த நிலையில், இன்று இரண்டாவது பௌர்ணமி வருகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது, அது பூமியில் இருந்து மிக நீண்ட தொலைவில் (சுமார் 4,06,135 கி.மீ) இருக்கும் போது, சாதாரண நாட்களை விட நிலவு அளவில் சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றும். இதனையே ‘மைக்ரோ மூன்’ என்கிறோம். புளூ மூன் நிகழ்வு பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். ஆனால்,…

Read More

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் பிறந்த நட்சத்திரமாகக் கருதப்படும் வைகாசி விசாகத்தன்று, பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். இதையொட்டி இன்று (மே 30) அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானைத் தரிசித்தனர். தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல்…

Read More

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. காந்தி வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில், 40-வது ஆண்டு மகோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ பராபவ வருஷத்திய 40-வது ஆண்டு மகோத்ஸவ விழா, கடந்த 22-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ரிஷப வாகனம், நாக வாகனம் மற்றும் பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 30) காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வேதபுரீஸ்வரர் எழுந்தருள, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் “ஓம் நமச்சிவாயா” எனும் முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்தத்…

Read More

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வைகாசி விசாகத் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் மலைக்கோயிலுக்குச் செல்லும் வின்ச் ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மலைக்கோயிலில் உள்ள பொதுதரிசன வழி மற்றும் கட்டண தரிசன வழிகள் என அனைத்துப் பாதைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்திப் பரவசத்துடன் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் பழனி நகர் மற்றும் மலைக்கோயில் பகுதிகளில்  பாதுகாப்பு ஏற்பாடுகளும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் நிழற்பந்தல் உள்ளிட்ட…

Read More

‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற டிஜிட்டல் நையாண்டி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகக் கணக்கு மீதான தடையை உடனடியாக நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “சமூக ஊடகங்களில் செயல்படும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள்” என்று விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளம்பியது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கமளித்தார். இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே என்பவர், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் கணக்குகளைத் தொடங்கினார். இந்தக் கணக்குகளைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு கோடியைத் தாண்டியது. இதில் பின்தொடர்பவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு இந்த சமூக…

Read More

தமிழக அமைச்சர்களுக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் (Greenways Road) அமைந்துள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், அமைச்சரவை உறுப்பினர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சர்கள் தங்குவதற்கான அரசு பங்களாக்களை ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சுஞ்சோஙம் ஜாடக் சீரு (Shunchonngam Jatak Chiru) உத்தரவிட்டுள்ளார். ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு பங்களாக்களுக்கு அமைச்சர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை அமைச்சர்களின் பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் வைக்குமாறு பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் முல்லை – (NB No.27)                                  திரு. ஏ. ஸ்ரீநாத், மீன்வளத் துறை அமைச்சர் தாமிரபரணி -…

Read More

ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரிக் கல்வி ஆணையராக இருந்த இ.சுந்தரவள்ளி, அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலராகவும், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆர். லலிதா, நிதித் துறைச் செயலராகவும் (செலவினம்) நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய தலைமைச் செயல் அதிகாரி பூஜா குல்கர்னி, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையராகவும், வி.அமுதவில்லி ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக இருந்த பி.பொன்னையா, கல்லூரிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பி.ஆகாஷ் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் இருந்த பிரவீன் குமார், நாகை…

Read More

கொடைக்கானலில் நடைபெற்ற 25வது நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியுடன் கூடிய கோடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நடத்திய 25-வது நாய்கள் கண்காட்சி நேற்று பூங்கா வளாகத்தில் மிக உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சைபீரியன் ஹஸ்க்கி, கோல்டன் ரெட்ரீவர், டாபர்மேன், அமெரிக்கன் புல்லி, மினியேச்சர், பாக்சர், சிட்சூ, லசாப்சோ, கான் கார்ஸோ, ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் நம்முடைய பாரம்பரிய ராஜபாளையம் வகை நாய்கள் என மொத்தம் 15 ரகங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நாய்களின் குணாதிசயங்கள், உரிமையாளரின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல், ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 5 சுற்றுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாய் ரகமும் தத்தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்த, பூங்காவிற்கு வந்திருந்த…

Read More