Author: Editor web1

போர் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலில், இஸ்ரேலிய அதிகாரப்பூர்வ அமைப்புகளையும் சேர்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இஸ்ரேல் சிறைச்சாலை சேவை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன கைதிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது திட்டமிட்டு பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர் நிலவும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து ஐநா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது இஸ்ரேலிய அமைப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஐநா-வின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது. ஐநாவின் இந்த நடவடிக்கை “அறநெறிக்கு மாறானது” என்றும், இது ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் இஸ்ரேலிய தூதர் டேனி டானோன் (Danny Danon) கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஐநா தலைமைச்…

Read More

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி என்ற பிரமாண்ட மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு திரைப்படம் தமிழகத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல்முறை என்பதால், இது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ‘கருப்பு’ திரைப்படம் இதுவரை ரூ.280 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இந்த வசூல் சாதனை மூலம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் ‘கருப்பு’…

Read More

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா அவர்களை நியமிக்க உச்சநீ திமன்றக் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம், மே 22 மற்றும் மே 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களில், நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகிய ஐவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு செய்யப் பரிந்துரைத்துள்ளது. வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மிகச் சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ராவுக்குப் பிறகு, வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது பெண்மணி எனும் பெருமையை வி. மோகனா பெறுவார். கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மோகனா, பல ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டம்,…

Read More

தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசரக்கால நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப் படைக்கு, தற்போது பிரத்யேகமான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 10ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிங்கப் பெண் அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதைச் செயல்படுத்தும் விதமாக சிங்கப் பெண் அதிரடிப் படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டு, அந்த படையின் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். சாதாரண காவல்துறை சீருடைகளில் இருந்து மாறுபட்டு, களத்தில் பணியாற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையினரை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் களப்பணிகளில் ஈடுபடும் போது தடையின்றி செயல்படும் வகையில், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீடித்த உழைக்கக்கூடிய துணிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சீருடை அறிமுகத்தின் மூலம், அதிரடிப் படையினரின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, பொதுமக்களிடையே அவர்களுக்கு இருக்கும்…

Read More

புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா இன்று (மே 28) அதிகாலை கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும். அத்தி வரதர் புகழ்பெற்ற தேவராஜ ஸ்வாமி என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்தநிலையில், நேற்று (மே 27) சேனை மார் புறப்பாடு தொடங்கி, இன்று (மே 28) அதிகாலை 5 மணியளவில் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத எம்பெருமான் கொடி மரம் அருகே எழுந்தருள வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பஞ்சவர்ண மாலை தங்க வைர ஆபரணங்கள் சூடி எம்பெருமான் எழுந்தருளி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு…

Read More

பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கொள்கை முடிவை எடுப்பார் என்றார். மேலும், கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைளை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தனது இந்தக் கருத்துக்கள் ஊடகங்களில் தவறாகத் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு அவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தனது கருத்தின் உண்மையான நோக்கம் திசைதிருப்பப்பட்டுள்ளதாகவும், நாகரிகமான அரசியலை வலியுறுத்திய எனது வார்த்தைகள், தவறான கண்ணோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், தனது கருத்து அமைந்ததாக கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவது சமூகத்தில் குழப்பத்தை…

Read More

கர்நாடக மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, முதல்வர் சித்தராமையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் சித்தராமையா இன்று (மே 28) ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க உள்ளார்.முன்னதாக, மாநில அமைச்சரவை உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. சித்தராமையாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ராஜினாமா உறுதி செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் சட்டமன்றக் குழுவைக் கூட்டி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தலைமை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு, காங்கிரஸ் மேலிடத்துடன் உயர்நிலை ஆலோசனைக்…

Read More

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் (Eliminator), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது தகுதி சுற்றுக்கு (Qualifier 2) முன்னேறியது. நியூ சண்டிகரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடித் தொடக்கத்தை அளித்தார். 16 பந்துகளில் அரைசதம் கடந்து சூர்யவன்ஷி மிரட்டினார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய சூர்யவன்ஷி, ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யவன்ஷி 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜூரேல் அரைசதம் அடிக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்…

Read More

மதுராந்தகம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேலுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், அதனை கிழித்தும், எரித்தும் அதிமுகவினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்த சம்பவம், அதிமுகவினரிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த மரகதம் குமரவேல், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் இணைந்தநிலையில், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தொகுதியின் பல்வேறு இடங்களில் மரகதம் குமரவேலுக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, விமர்சித்தும், அவரது உருவப்படத்தை எரித்தும் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு…

Read More

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை வழங்கினார். 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (மே 27) டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு காவலர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய், மேகதாது விவகாரம், இலங்கை மீனவர்கள் பிரச்சனை, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். இந்தநிலையில், பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு விரைவான வளர்ச்சியைப் பெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்த வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்:…

Read More