Close Menu
    What's Hot

    தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கிடைத்த கௌரவம்.. ‘லோக்மான்ய திலகர் விருது’ அறிவிப்பு..!!

    அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் –  திமுக மறுசீரமைப்பு குழு பணியினை கேட்டறிந்தார்

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஐ.பி.எல். பிளே-ஆப்: ஐதராபாத்தை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்!
    விளையாட்டு

    ஐ.பி.எல். பிளே-ஆப்: ஐதராபாத்தை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்!

    Editor web1By Editor web1May 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RR
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் (Eliminator), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது தகுதி சுற்றுக்கு (Qualifier 2) முன்னேறியது.

    நியூ சண்டிகரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடித் தொடக்கத்தை அளித்தார். 16 பந்துகளில் அரைசதம் கடந்து சூர்யவன்ஷி மிரட்டினார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய சூர்யவன்ஷி, ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யவன்ஷி 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜூரேல் அரைசதம் அடிக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது.

    244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத், 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நிதிஸ் குமார் ரெட்டி (38 ரன்கள்) மற்றும் சலீல் அரோரா (35 ரன்கள்) மட்டுமே ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.

    இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனையடுத்து, முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராஜஸ்தான் நாளை மறுநாள் (மே 29) மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேலுக்கு கண்டனம்: போஸ்டர்களை கிழித்தும், எரித்தும் எதிர்ப்பு!
    Next Article கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ராஜினாமா?- புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க வாய்ப்பு
    Editor web1
    • Website

    Related Posts

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    July 21, 2026

    2030 உலகக் கோப்பை கால்பந்து: 3 நாடுகளில் போட்டி; ஏற்பாடுகள் தொடங்கின

    July 20, 2026

    DC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கிடைத்த கௌரவம்.. ‘லோக்மான்ய திலகர் விருது’ அறிவிப்பு..!!

    அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் –  திமுக மறுசீரமைப்பு குழு பணியினை கேட்டறிந்தார்

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    பரந்தூர் விமானநிலைய திட்டம் தொடர்ந்து நடக்கும்!. மத்திய அரசு விளக்கம்!

    முதலமைச்சர் விஜய் தலைமையில் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா – நடிகர் பிரபு தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.