Author: Editor web1

‘திரிஷ்யம் 3’ திரைப்படம் ரூ.200 வசூலை நெருங்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக சாதனையைப் படைத்து வருகிறது. சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இப்படம் வெளியான 58 மணி நேரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டிப் பிடித்து சாதனை படைத்ததாக கூறுப்படுகிறது. தற்போது, இப்படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்துள்ளநிலையில், உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கேரளாவில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எம்புரான்’ படத்தைத் தொடர்ந்து, மிக வேகமான முறையில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற பெருமையை ‘திரிஷ்யம் 3’ பெற்றுள்ளது. இந்த வேகத்தில்…

Read More

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நானி நடிப்பில் வெளியாக உள்ள ‘தி பாரடைஸ்‘ படத்தில் இடம்பெற்ற ‘ஆயோ ஷேர்‘ பாடல் யூடியூப்பில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆயா ஷேர்’ (Aaya Sher) பாடல், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முதல் பல தளங்களில் இந்தப் பாடல் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது யூடியூப்பிலும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. யூடியூப்பில் இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு மட்டும் 150 மில்லியன் (15 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் 1.6 மில்லியன் (16 லட்சம்) லைக்குகளைப் பெற்று இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் ஐதராபாத்தில் நடந்த அனிருத்தின் இசைக் கச்சேரியில், இந்தப் பாடலுக்கு நானி…

Read More

சென்னையில் இன்று (மே 27) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளநிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜூன் 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று (மே 27) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. குறிப்பாக, பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நீண்ட நாட்களாகத் தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், நாளையுடன் (மே 28) நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மழையின் தாக்கம் இருந்தாலும், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பமும் ஈரப்பதமும் கலந்து காணப்படும் என்றும், சென்னையில் இன்று (மே 27) அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டை…

Read More

ஈரான் உடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மேம்படுத்தும் ‘ஆபிரகாம் ஒப்பந்தத்தில்’ முஸ்லிம் நாடுகள் கைகெயழுத்திட வேண்டுமென்ற அமெரிக்க அதிபரின் நிபந்தனையை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அண்மையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த டிரம்ப், “ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஒப்பந்தம் வெற்றி பெற வேண்டுமானால், சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகள் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தில் இணைய மறுக்கும் நாடுகள் மத்தியஸ்தப் பணிகளில் பங்கேற்க முடியாது என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். டிரம்பின் இந்த அழுத்தத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காஜா ஆசிஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். தங்கள் நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இஸ்ரேலை அங்கீகரிப்பது என்பது பாகிஸ்தானின் நீண்டகாலக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் பாலஸ்தீன அரசு உருவாக்கப்படும்…

Read More

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்றும், அவருக்குப் பதிலாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் புதிய முதலமைச்சராக  பொறுப்பை ஏற்கலாம் என்றும் வெளியாகும் தகவல்களால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தலைமை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு, காங்கிரஸ் மேலிடத்துடன் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் நிலவும் தலைமை மோதலுக்குத் தீர்வு காண, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். மே 26, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் சுமார் 7 மணி நேரம் நீடித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம், சித்தராமையாவை கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, மாநிலங்களவை உறுப்பினர் மூலம் தேசிய அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள்…

Read More

ஆந்திராவில் இருந்து கோவைக்குக் 10 கிலோ கஞ்சா கடத்திய சம்பவத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் கோவைக்குக் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். இந்த மெகா கடத்தல் வழக்கில், பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு, மே 25ம் தேதி இரவு ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கோவை சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் அதிவேகமாக வந்த TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட சரக்கு…

Read More

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் நாடு முழுவதும் மீண்டும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.33 காசுகள் உயர்ந்து ரூ.108.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 0.32 காசுகள் அதிகரித்து ரூ.99.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3.50 அதிரடியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த மே 15-ம் தேதி, பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 4 முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.7.50 வரை உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சர்வதேச விலைக்கு ஏற்ப விலையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.…

Read More

19வது ஐபிஎல் தொடரின் இன்று (மே 27) நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐதராபாத்- ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய (மே 27) போட்டி இரவு 7.30 மணிக்கு முலான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி, இந்தத் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் இருப்பதால், இரு அணிகளும் வெற்றிக்காகப் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் சுற்றில் 18 புள்ளிகளுடன் சிறப்பாகச் செயல்பட்ட ஐதராபாத் அணி, கடந்த கால நேருக்கு நேர் மோதல்களில் ராஜஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் கிளாசென், ஹெட், அபிஷேக் சர்மா போன்ற அதிரடி பேட்டர்கள் வலுசேர்க்கின்றனர். கடைசி கட்டத்தில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் அணி, நல்ல ஃபார்மில் உள்ள வைபவ்…

Read More

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்டன் கில், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேப்டன் பட்டிதாரின் அதிரடி ஆட்டத்தால் (33 பந்துகளில் 93 ரன்கள்; 9 சிக்ஸர்கள்) 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எனும் இமாலய இலக்கை நிர்ணயித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, பெங்களூருவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில்…

Read More

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 27) டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (மே 27) டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதன்கிழமை காலை 10 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படும் முதலமைச்சர் விஜய், பிற்பகல் அங்கு சென்றடைகிறார்.  டெல்லி தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் அவருக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.…

Read More