Close Menu
    What's Hot

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஆபிரகாம் ஒப்பந்தத்தில் சேர டிரம்ப் நிபந்தனை: பாகிஸ்தான் மறுப்பு!
    உலகம்

    ஆபிரகாம் ஒப்பந்தத்தில் சேர டிரம்ப் நிபந்தனை: பாகிஸ்தான் மறுப்பு!

    Editor web1By Editor web1May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் உடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மேம்படுத்தும் ‘ஆபிரகாம் ஒப்பந்தத்தில்’ முஸ்லிம் நாடுகள் கைகெயழுத்திட வேண்டுமென்ற அமெரிக்க அதிபரின் நிபந்தனையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

    அண்மையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த டிரம்ப், “ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஒப்பந்தம் வெற்றி பெற வேண்டுமானால், சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகள் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தில் இணைய மறுக்கும் நாடுகள் மத்தியஸ்தப் பணிகளில் பங்கேற்க முடியாது என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    டிரம்பின் இந்த அழுத்தத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காஜா ஆசிஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். தங்கள் நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இஸ்ரேலை அங்கீகரிப்பது என்பது பாகிஸ்தானின் நீண்டகாலக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் பாலஸ்தீன அரசு உருவாக்கப்படும் வரை இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் தனது பாஸ்போர்ட்டில் இஸ்ரேலை ஒரு நாடாகவே குறிப்பிடாத ஒரே நாடு என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் காஜா ஆசிஃப், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மாறாது என்பதை உறுதிப்படுத்தினார். சொன்ன சொல்லைக் காப்பாற்றாத ஒரு தரப்புடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று டிரம்ப்பின் முயற்சிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த ஒப்பந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் சவாலாக உருவெடுத்துள்ளது.

    பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல், இஸ்ரேலுடன் கைகோர்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை பாகிஸ்தான் இந்த மறுப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் சித்தராமையா?- கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்!
    Next Article கோலாகலமாக தொடங்கிய பிரெஞ்சு ஓபன்..! முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர்..!
    Editor web1
    • Website

    Related Posts

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    July 15, 2026

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    July 15, 2026

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.