Author: Editor web1

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் 1000 கனஅடி நீர் திறந்து விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். மே 26ம் தேதி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போது 744 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்வரத்தைக் கருத்தில் கொண்டு, வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அணையில் இருந்து 300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 1000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், கிருஷ்ணகிரி முதல் சாத்தனூர் அணை வரையிலான தென்பெண்ணை…

Read More

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய கடும் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெப்ப அலை மற்றும் கடுமையான உஷ்ணம் காரணமாக, மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களிலும், பெற்றோர்கள் மத்தியிலும் வலுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் மாறவில்லை என்றும் வானிலை மாற்றங்கள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதகாவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை வெப்பநிலை அபாயகரமான நிலையை எட்டினால்,…

Read More

இந்தியாவின் பிரதமராகத் தொடர்ந்து 11 ஆண்டுகளைக் கடந்து, 12-வது ஆண்டை இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் நரேந்திர மோடி. நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய தலைவர்கள் பட்டியலில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தைப் பிடித்து அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி, முதல் முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, அதன் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3 முறை பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்றுடன் அவர் தனது 12 ஆண்டுகாலப் பணிக்காலத்தை வெற்றிகரமாக முடித்து, 13-வது ஆண்டில் கால்பதித்துள்ளார். இந்த 12 ஆண்டுகால ஆட்சியில், மோடி தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய மாற்றங்களை முன்னெடுத்துள்ளது: டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நாட்டை மேம்படுத்தியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் செல்வாக்கை…

Read More

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (76) உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெருசலேமில் உள்ள ஹடாசா ஐன் கெரெம் மருத்துவமனையில் 25ம் தேதி மாலை பெஞ்சமின் நெதன்யாகு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்துப் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்குச் சிறு மருத்துவப் பரிசோதனை மற்றும் பல் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஊடகங்களில் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் இந்த விளக்கத்தை அளித்தது. அவர் எவ்வித ஆபத்தான நிலையிலும் இல்லை என்றும், அவருக்கு வழக்கமான பல் சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் பிரதமரின் உடல்நிலை அந்நாட்டு அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. அண்மையில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததையும், அதற்கு சிகிச்சை பெற்று குணமடைந்ததையும் நெதன்யாகு தாமதமாகவே பொதுவெளியில் அறிவித்தார். போர்க்காலச்…

Read More

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது.  உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த போர்ச் சூழலைத் தணிக்கும் வகையில், 60 நாள் கால அளவிலான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ஒன்றியம், ஒட்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெனுகுண்டாபுரம் ஏரிக்கரை பகுதியில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர்களின் கருத்துப்படி, இந்த கல்வெட்டுகள் சுமார் 1,134 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிகிறது. அக்காலத்தில் ‘தகடூர் நாட்டு’க்கு உட்பட்ட ‘மாதம்பதி’ எனும் கிராமம், ‘மாதமங்கலம்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அங்கு ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்ததாகவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ராஜராஜ சோழனின் பிரதிநிதியாக ‘வெள்ளான்’ என்பவரின் மகனான ‘ராஜேந்திர சோழன்’ அந்தப் பகுதியை நிர்வகித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. அப்பகுதியில் விளைநிலங்களில் புகுந்து ஆடு, மாடுகளைத் திருட வந்த சமூக விரோதிகளுடன் ராஜேந்திர சோழன் போர் புரிந்துள்ளார். அந்தப் போர்க்களத்தில் ஒரு சிப்பாயால் வெள்ளான் என்பவரின் மகனான ராஜேந்திர சோழன் என்ற பெயர் கொண்ட ஆட்சியாளர் வீழ்த்தப்பட்டார் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி உடன்கட்டை ஏறியது போன்ற…

Read More

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குனர் ரவி நெலகுடிட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பான்-இந்தியா’ திரைப்படமான #DQ41-ன் முதல் கட்டப் படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டப் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு தீவிரமாகத் தயாராகி வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதல் மற்றும் உணர்ச்சிகரமான நாடகமாக உருவாகும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாகப் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் தீக்ஷித் ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ் மற்றும் வினாலி பட்நாகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்தத் திரைப்படம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காகத் துல்கர் சல்மானின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்…

Read More

எதிர்காலப் போர்கள் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பம் மற்றும் வியூகங்களைக் கொண்டிருக்கும் என்று முப்படைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அஹில்யா நகர் மாவட்டம் ஷீரடியில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிறகு பேசிய முப்படைத் தளபதி அனில் சவுகான், எதிர்காலப் போர்கள் வெறும் மனித சக்தியை மட்டுமே நம்பி இருக்காது என்றும் மாறாக, நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவையே போர்க்களத்தின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் முப்படைத் தளபதி அனில் சவுகான் குறிப்பிட்டார். தேசப் பாதுகாப்பு என்பது வீரர்கள், மாலுமிகள், விமானப் படையினர் ஆகியோரின் துணிச்சல் சார்ந்ததாக மட்டும் இருக்காது என்றும் தொழில்நுட்பம், தொழில் திறன் மற்றும் உற்பத்தி பலம், புத்தாக்கத் திறன் ஆகியவை தொடர்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். உலக நாடுகளின் தற்போதைய…

Read More

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் இதமான வானிலை காரணமாக, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட இன்று (மே 24) மிக அதிகமாகக் காணப்பட்டது. கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை படகுகளில் சென்று கண்டு களித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்ய பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், கடற்கரையோரம் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் சிப்பி மற்றும் சங்கு மாலைகள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரைப் பகுதியில் விபத்துகளைத்…

Read More

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளை மாளிகையின் 17-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கு அருகே சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். திடீரென அவர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கினார். இதனால் பதற்றமடைந்த அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் அந்த நபருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டநிலையில், தாக்குதல் நடத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் 21 வயதான நாசீர் பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதமே வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதற்காகக் கைது…

Read More