Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!
    உலகம்

    அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!

    Editor web1By Editor web1May 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    வெள்ளை மாளிகையின் 17-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கு அருகே சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். திடீரென அவர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கினார். இதனால் பதற்றமடைந்த அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் அந்த நபருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டநிலையில், தாக்குதல் நடத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த நபர் 21 வயதான நாசீர் பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதமே வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது 15 முதல் 30 ரவுண்டுகள் வரை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தாக்குதல் நடத்தியவரின் குண்டு பட்டு காயமடைந்தாரா அல்லது பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலில் காயமடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலேயே இருந்தார். எனினும், அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது. அங்குள்ள செய்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முடக்க நிலை நீக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ மற்றும் ரகசிய பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவல்துறையில் அதிரடி மாற்றம்!- “தினமும் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை”
    Next Article களைகட்டிய கன்னியாகுமரி: கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
    Editor web1
    • Website

    Related Posts

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    August 9, 2026

    2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!

    August 9, 2026

    தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி மாணவர்!. அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.