Author: Editor web1
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடந்தது என்ன, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து மேற்கு மண்டல காவல் துறை இணை இயக்குநர் (ஐஜி) ரம்யா பாரதி விரிவாக விளக்கி உள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வழக்கின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய அவர், சம்பவம் நடைபெற்ற அன்று மாலை 6 மணியளவில் சிறுமி வீட்டில் காணவில்லை என அவரது பெற்றோர் 100 என்ற அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். இரவு 10 மணிக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணியாற்றின. சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாக ஆய்வு செய்ததில், பக்கத்து வீட்டில் வசித்த கார்த்தி என்பவன் சிறுமியை இனிப்பு…
கோயம்புத்தூர் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடற்கூராய்வு (Autopsy) நிறைவடைந்து, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கோவைக்கு நேரில் விரைந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களையும், உறவினர்களையும் நேரில் சந்தித்து முதலமைச்சரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குற்றவாளிகளுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகத் தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது, “இந்த வழக்கில் எவ்வித சமரசமும் இன்றி, குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்.…
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. கோயம்புத்தூரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போன நிலையில், பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹாட்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த வழக்கில் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (ATR) ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள், பாரதிய நியாய…
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, பல்லடத்தை அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பெற்றோர்கள் தேடியும் கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கண்ணம்பாளையம் பெரிய குளத்தில் சிறுமி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவர் கைது சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரை சனிக்கிழமை அதிகாலை போலீஸார் கைது…
தமிழக அரசியலில் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், திமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை (ED) குறிவைத்துள்ளது. வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையின் கடிதத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழகத்தில் பல திமுக தலைவர்கள் மீதான பழைய வழக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சூழலில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை திமுக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை…
திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு வலியுடன் அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமியின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது சக மாணவிகளும் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீதாலட்சுமி மூக்கு வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு வந்த மாணவியின் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதனால் மருத்துவ அலட்சியம் மற்றும் தவறான அணுகுமுறை இருந்ததாக புகார்கள் எழுந்தன. சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டு, நீதி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம் தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பிராமண அமைப்புகளால் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. கோவில்களின் நிர்வாகத்தை ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கை. இதற்காக சட்டப் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர் பிரச்சாரங்களும் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் துறையை ஒரு பிராமணருக்கு ஒப்படைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சாதி…
கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் உடல் மீட்கப்பட்டதிலிருந்து கோவை மக்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுதுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார். “கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிருகத்தனமான…
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய்யிடம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், சினிமா துறையின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்பதால், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, 10 அம்சங்கள் கொண்ட மெகா மனுவை சமர்ப்பித்தனர். இந்த சந்திப்பில் முக்கிய கோரிக்கையாக, திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ₹250 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர். தற்போது மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட உயர்தர திரையரங்குகளில் நிலவும் டிக்கெட் விலை வரம்பை மாற்றி, அரசு அதிகாரப்பூர்வமாக ₹250 வரை அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். OTT தளங்களின் தீவிர வளர்ச்சி, கடுமையான மின் கட்டண உயர்வு, சொத்து வரி…
மத்திய அரசு பணிகளில் மாநில மொழி அறிவை அடிப்படைத் தகுதியாக சேர்க்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றி. தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஒன்றிய அரசு பணிகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நியமனங்களை பெறுவது, அலுவலக சேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. மாநில மொழி கட்டாயம் மாநில அளவிலான நியமன தேர்வு நடைபெற வேண்டும்…