Author: Editor web1
மத்திய அரசு 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று ட்முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த இந்த உயர்மட்ட கூட்டத்தில், அரசின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து நடைபெற்ற முழுமையான அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோடி அரசு ஜூன் 9-ஆம் தேதி 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூழலில், அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த கால நிகழ்வுகளில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையாக எதிர்காலத்தை நோக்கி செயல்பட வேண்டும்” என்று அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு…
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகிகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொண்ட ஆய்வுப் பயணம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். அண்மையில் த.வெ.க. நிர்வாகிகள் தென்காசி மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, அங்குள்ள மருத்துவ வசதிகள், உபகரணங்கள், நோயாளிகளுக்கான சேவைகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தனர். மக்கள் நல நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்படாத கட்சி நிர்வாகிகள் அரசு அமைப்புகளில் நேரடியாக தலையிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மற்றும் சில அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் என். ஆனந்த், “மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு நிர்வாக செயல்பாடுகளில் ஆய்வு செய்வதோ, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சியினர் சட்டப்பூர்வமான மற்றும் அரசியல் ரீதியாக ஏற்ற நடைமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்…
தமிழகத்தில் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டது. கூட்டணிக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) சார்பில் வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக, விசிக தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சி சார்பில் வன்னியரசு எம்.எல்.ஏ. அமைச்சராக பதவியேற்பார் என அறிவித்திருந்தார். அதேபோல், ஐயூஎம்எல் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் இருவருக்கும் பதவி ஏற்பு மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விழா பாரம்பரிய முறையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. வன்னியரசுக்கு…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிரடி பணியிட மாற்றம் தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நகர்வாக, சென்னை பெருநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.அமல்ராஜ், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் ஆணையத்தால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த அபின் தினேஷ் மோதக், தற்போது சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த அமல்ராஜ், தற்போது சென்னை மாநகரின் புதிய சட்டம்-ஒழுங்கு காவல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1996-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தன் பணியைத் தொடங்கினார். தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களின் எஸ்பியாகவும், திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களின் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு…
நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மு. மாறன். இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது. சமூக உணர்வுகளும், குடும்ப பாசமும் கலந்த கதைகளை வித்தியாசமான முறையில் சொல்லும் திறன் கொண்ட மு.மாறன், இந்தப் படத்தையும் உணர்ச்சி, அதிரடி மற்றும் குடும்ப நெகிழ்ச்சிகள் இணைந்த திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உணர்ச்சி ஆழமுள்ள அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், தந்தை – மகள் உறவின் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட கதை ரசிகர்களை நெகிழ்ச்சியடையச்…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் அவர்கள், வரும் மே 23 அன்று டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் 33 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நேற்றுதான் முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த முதல் டெல்லிப் பயணம் தேசிய அளவில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதலமைச்சர் தங்குவதற்கான அதிநவீன ‘சூட் ரூம்’ மற்றும் அவசர ஆலோசனைக் கூட்ட அரங்கு உள்ளிட்டவை மிகத் தீவிரமாக, போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுத் தயாராகி வருகின்றன. முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லிப் பயணத்தின் முதன்மை நோக்கம், தமிழ்நாடு எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியைச் சீர்செய்வதே ஆகும். குறிப்பாக, ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதிப் பகிர்வு மற்றும் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களில்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”மத்திய அரசு PMSHRI திட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய வைகோ, ஆளுநர் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலைத் திணிப்பதாகச் சுட்டிக்காட்டினார். “மும்மொழி கொள்கையை அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் தமிழக அரசு அதை ஏற்கக் கூடாது. அப்படி செய்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும்” என்றார். தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி குறித்து கேள்விக்கு பதிலளித்த வைகோ, “கூட்டணி ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 6 மாதம் கால அவகாசம் கொடுப்போம். பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். மாநில சுயாட்சிக்கு இடையூறு ஏற்படாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும், பாஜக திட்டங்களைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். “ராமர் இருக்கும்…
இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை விரிவாக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். முதல்வர் விஜய் பதவியேற்ற போதே வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது விவாதமானது. அப்போது, “இனி இப்படி நடக்காது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். ஆனால், இன்று நடந்த 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் அதேமுறை தொடர்ந்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன். ஆனால், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகளில் இதுதான் நடைமுறை என்று கூறிவிட்டார்கள். இனிவரும் காலங்களில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும். தமிழுக்கே முதலிடம்” என்றார். அதிகாரம் பழகும்…
தமிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வியூகங்கள் மாறி வருகின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் அதிமுகவின் அதிருப்தி அணி, இப்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கே ‘செக்’ வைக்கும் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில், தமிழக அரசியலின் தற்போதைய போக்கைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இரண்டு மிக முக்கியமான ‘ஸ்கெட்ச்கள்’ போடப்பட்டுள்ளன. 1400 கையெழுத்துகள்… எடப்பாடிக்கு சட்ட நெருக்கடி! கூட்டத்தின் முதல் அதிரடியாக, அதிமுகவின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டையும் எடப்பாடியிடமிருந்து பறிப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு ஆதரவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக, தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் இருந்து 1400 படிவங்களில் முறைப்படி…
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான 63-வது மலர் கண்காட்சி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரையண்ட் பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் துறையும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து ஒருங்கிணைத்துள்ள இக்கண்காட்சியைக் காண, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாக, சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வண்ணமயமான கொய்மலர்களைக் கொண்டு பல்வேறு பிரம்மாண்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திண்டுக்கல் நகரின் அடையாளமான ‘திண்டுக்கல் பூட்டு’, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாம்பன் பாலம்’, தமிழரின் கட்டிடக்கலைக்குச் சான்றான ‘தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கோபுரம்’ மற்றும் வீர விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது’ போன்ற மலர் உருவங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன. இது தவிர, பெண்கள் மேம்பாட்டை வலியுறுத்தும் உருவங்கள், நேரோட்டோ பொம்மை மற்றும் காதலர்களைக் கவரும் வகையில் ‘இரட்டை…