Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»குடும்பம் – ஆக்ஷன் கலவையில் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!
    சினிமா

    குடும்பம் – ஆக்ஷன் கலவையில் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

    Editor web1By Editor web1May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay antony
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மு. மாறன். இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது.

    சமூக உணர்வுகளும், குடும்ப பாசமும் கலந்த கதைகளை வித்தியாசமான முறையில் சொல்லும் திறன் கொண்ட மு.மாறன், இந்தப் படத்தையும் உணர்ச்சி, அதிரடி மற்றும் குடும்ப நெகிழ்ச்சிகள் இணைந்த திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உணர்ச்சி ஆழமுள்ள அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், தந்தை – மகள் உறவின் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட கதை ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்யும் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    படத்தில் நடிகைகள் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா ஆகியோருடன் பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை ராஜீவ் ராஜேந்திரன் மேற்கொண்டுள்ள நிலையில், இசை மற்றும் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை ஏ. ராஜா மேற்கொண்டுள்ளதுடன், சண்டைக் காட்சிகளை ராஜசேகர் அமைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி விரையும் முதலமைச்சர் விஜய்: காத்திருக்கும் அரசியல் சந்திப்புகள்!
    Next Article எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா சென்னை காவல் ஆணையர் பி. அமல்ராஜ்?
    Editor web1
    • Website

    Related Posts

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026

    தனுஷின் ’ஓம்’!

    June 18, 2026

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.