Close Menu
    What's Hot

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!
    Featured

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    Editor web2By Editor web2August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay sangeetha divorce case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சரும் தனது கணவருமான ஜோசப் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி தொடரப்பட்ட மனுவை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது.

    இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

    கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இரு தரப்பினரும் நேரில் ஆஜராகாமல், தங்களது வழக்கறிஞர்கள் மூலம் மட்டுமே ஆஜராகினர். அப்போது வழக்கின் நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் ஆலோசித்ததுடன், சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்ததால் முதலமைச்சர் விஜய் தரப்பில் வழக்கை வேறு தேதிக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சங்கீதா தரப்பு, வழக்கை அன்றே விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து, இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி சுஜாதா, விசாரணையை பிற்பகல் வரை ஒத்திவைத்தார்.

    பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின் போது, வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக ஆஜரான சங்கீதா, தாம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கி, விவாகரத்து தொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.

    இதன் மூலம் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.

    cmvijay DivorceCase sangeetha tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!
    Next Article பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!
    Editor web2
    • Website

    Related Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    August 7, 2026

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    August 7, 2026

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.