Author: Editor web1
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கட்சியினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அவரது மகன் நயினார் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட பதவிகள் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது அதிமுகவுடன் இணக்கமான கூட்டணி உத்தி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை பாஜக தலைமை நீக்கியது. அதற்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்சி செயல்பட்டு வந்த நிலையில், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முந்தைய சட்டமன்றத்தில் 4 உறுப்பினர்களுடன் இருந்த பாஜக, இப்போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் திருப்தி அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் தனது மகன் நயினார்…
தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றதை விமர்சித்து சமூக வலைதளத்தில் திமுக எம்.பி. ராசா பதிவிட்ட கவிதை கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்ட நிலையில், அதனை பின்னர் நீக்கினார். இந்த நிலையில், கடந்த காலங்களில் திமுகவுக்கு தங்கள் கட்சி எந்த அளவுக்கு திமுகவுக்கு உறுதுணையாக இருந்தது என்பதை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கலைஞர் மறைவுக்குப் பின்… தலைவர் கலைஞர் மறைந்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்ற அந்த இக்கட்டான காலகட்டத்தில், அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முகவரியாக வர வேண்டும் என்று முதன்முதலில் பொதுமேடைகளில் முழங்கியவர் நம் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன். திமுகவின் தலைமை மாற்றத்தின் போது தார்மீக பலமாய் நின்றது விசிக! 2019 நாடாளுமன்றத் தேர்தல்: தனிச்சின்னம் துணிச்சல்! 2019-ல் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமே விசிக-வின் வாக்கு வங்கிதான். கூட்டணி தர்மத்திற்காக, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல்,…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆபாசமாக விமர்சித்த ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெற்றுள்ள நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா தனது சமூக ஊடகப் பக்கத்தில் விசிகவை கடுமையாக விமர்சனம் செய்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசா தனது பதிவில், ”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!” என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு பலரது கண்டனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஆ.ராசா அதை உடனடியாக நீக்கினார். இந்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவின் நடவடிக்கையை தீவிரமாகக் கண்டித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்று, பெரும்பான்மை இல்லாத சூழலிலும்…
காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதை கண்டித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான உரிமையை மழுங்கடிக்க முயற்சிப்பதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. ஆட்சி மாறினாலும் இந்தப் போக்கு மாறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பூமி பூஜை செய்யும் அளவுக்கு தைரியம் எப்படி வருகிறது என்பதை அவர் கேள்வி எழுப்பி உள்ள அவர், இவ்விஷயத்தில் தமிழக அரசு மவுனம் சாதிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். “தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசு காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொய்க்கால் குதிரை அரசு என்பதால் தான் கர்நாடக காங்கிரஸ்…
எபோலா நோய் பரவல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) இதை சர்வதேச அளவில் கவலையளிக்கும் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் பரவி வரும் பண்டிபுக்யோ வகை எபோலா தொற்று இதுவரை 246 சந்தேக நோயாளிகளையும் 80 சந்தேக மரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கோவின் இடுரி மாகாணத்தில் இந்த நோய் தீவிரமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மூலம், எபோலா பாதிப்புள்ள ஆப்பிரிக்க…
தமிழ்நாட்டின் அரசியல் களம் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைமையில் உருவான புதிய அரசில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைமையில் அமைந்த கூட்டணி அரசு, இப்போது இந்த இரு கட்சிகளின் ஆதரவுடன் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு சமூக நீதி, ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத் துறை ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். அதேபோல், ஐயூஎம்எல் சார்பில் ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த இணைப்பு, தவெக அரசுக்கு கூடுதல் வலு சேர்க்கும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயுஎம்எல் கட்சியும் இடம்பெற்றதை திமுகவின் ஆ.ராசா தனது…
தமிழக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் போராட்ட வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாக மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எட்டு ஆண்டுகள் கடந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றன என்பதே இன்றைய வேதனையான உண்மை. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வந்தனர். ஆலையிலிருந்து வெளியான நச்சு வாயுக்கள், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசு காரணமாக சுவாச நோய்கள், தோல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆலையை விரிவுபடுத்தும் திட்டம் வெளியானபின், எதிர்ப்பு மேலும் தீவிரமடைந்தது. காவல்துறையின் அராஜகம் 2018 மே 22ஆம் தேதி, போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது…
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்ல உள்ள விஜய், தேசிய அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரான சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய்யின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. அரசியல் சந்திப்புகளுக்கு அப்பால், இந்த பயணத்தில் தமிழர் பெருமையை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வும் இடம்பெற உள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ( ஜே.என்.யு) வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாடு அரசின் ரூ.65 லட்சம் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, சுமார் 7 அடி உயரமும், 1000 கிலோ எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜே.என்.யு.…
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையான விமர்சனம் செய்துள்ளார். இதற்கு விசிக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எளிய மக்கள், விளிம்புநிலை சமூகத்தினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் விசிக, தற்போது அந்த இலக்கை நோக்கி முக்கிய அடியெடுத்து வைத்துள்ளது. இன்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நடவடிக்கையை திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகத் தாக்கினார். ஆ.ராசா தனது பதிவில், ”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை…
தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது அடுத்த ஆண்டில்தான் தெரியவரும் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலக்கல்லாக விளங்கும் மகேந்திர சிங் தோனி, நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட களமிறங்கவில்லை. 44 வயதான இந்த லெஜண்ட் வீரரின் இந்த முடிவு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி இன்னும் ஓய்வு பெறுவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அடுத்த சீசனில் அவர் மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்குவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் அனுபவம், குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் வெளிப்படுத்தும் அழுத்தமான பேட்டிங் மற்றும் கூலாக எடுக்கும் முடிவுகள், சிஎஸ்கே அணிக்கு எப்போதும் பெரும் வலிமையாக இருந்து வந்தன. அவரது இருப்பு மட்டுமே எதிரணி பவுலர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி, போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டது. இந்த…