Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?” – திமுகவுக்கு விசிக பதிலடி..!
    Featured

    “அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?” – திமுகவுக்கு விசிக பதிலடி..!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    A Raja SS Balaji
    எஸ்.எஸ். பாலாஜி - ஆ.ராசா
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையான விமர்சனம் செய்துள்ளார். இதற்கு விசிக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எளிய மக்கள், விளிம்புநிலை சமூகத்தினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் விசிக, தற்போது அந்த இலக்கை நோக்கி முக்கிய அடியெடுத்து வைத்துள்ளது. இன்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நடவடிக்கையை திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகத் தாக்கினார்.

    ஆ.ராசா தனது பதிவில்,

    ”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

    மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

    வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

    முட்டுக் கொடுக்குமென்றால்;

    பூ முடித்தவனை புறந்தள்ளி —

    புணர்ச்சிக்கு வேறிடம்

    தேடுவதில் தவறில்லை!

    பெரியாரின்

    ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு

    காத்திருப்போம் ;  என்றாலும்

    களமாடுவோம் !

    வெற்றி நமக்கே!!” என்று காட்டமாக விமர்சித்தார்.

    விசிக பதிலடி

    இந்நிலையில் இந்தக் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், செய்யூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி உடனடியாகப் பதிலடி கொடுத்தார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

    “அதிகாரம் எளியவர்க்கு

    அதிலென்ன ஆத்திரம்

    ஆற்றாமையால் அள்ளிவீசும்

    அவதூறுகள் அசைத்திடாது

    அமைதியாய் கடப்பது

    அநாகரீகம் தவிர்க்கவே.

    அநீதி தொடர்ந்து

    அனைத்தும் உரைத்தால்

    அணைக்க முடியா

    அனலில் தகித்து போவீர்!”

    விசிக தரப்பில், ‘‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனும் முழக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதை ஆ.ராசா சகித்துக்கொள்ள முடியாமல், வெறும் ஆற்றாமை மற்றும் அரசியல் பயத்தால் இத்தகைய அவதூறுகளை அள்ளி வீசுகிறார்’’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், அநாகரிக அரசியலைத் தவிர்க்கும் வகையில் தற்போதைக்கு அமைதி காக்கப்படுவதாகவும், தொடர்ந்து அநீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி, அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்கள் தமிழக அரசியலில் மீண்டும் மையமாகியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓய்வு பெறுகிறாரா தோனி..? போட்டுடைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!
    Next Article நாளை திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் – சீனியர்கள் வழிவிட வேண்டும்; எதிர்பார்ப்பில் இளைஞரணியினர்!
    Editor web1
    • Website

    Related Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.