Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாளை திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் – சீனியர்கள் வழிவிட வேண்டும்; எதிர்பார்ப்பில் இளைஞரணியினர்!
    Featured

    நாளை திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் – சீனியர்கள் வழிவிட வேண்டும்; எதிர்பார்ப்பில் இளைஞரணியினர்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 mks A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் தோல்விக்குப் பின்பாக நாளை நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திமுக இளைஞரணி  அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி  மாவட்ட _ மாநில _ மாநகர  அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆலோசனைக்கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது தொடர்பாகவும் , அதேபோல திமுக இளைஞரணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தினை  கூட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில் பேசுகையில், திமுகவின் தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான் எனப் பேசினார்.

    திமுக ஆட்சி அமைக்கவில்லையே தவிர, திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சி அமைந்திருப்பதாகக் கூறியவர், கழகத்தின் தலைவர் என்ற முறையில, இந்தத் தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியதோடு, தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழுவையும் அமைத்தார்.

    010 mks

    அதுமட்டுமின்றி திமுகவின் பிரச்சார யுத்தியை இன்றைய தலைமுறைகளுக்கு  ஏற்றபடி,  மாற்றவேண்டும். டீக்கடை அரசியல் டூ சோஷியல் மீடியா அரசியலாக நாம் மாறவேண்டும் எனவலியுறுத்தினார்.

    இந்த நிலையில நாளை நடக்க இருக்கும் இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், பிரச்சாரயுக்தியை மாற்றுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில தேர்தல்களாகவே திமுகவில் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக, கட்சியின் அடிமட்ட அளவில் உழைக்கும் இளைஞரணி நிர்வாகிகள், வரும் காலங்களில் தங்களுக்கு முக்கியப் பொறுப்புகளும், தேர்தல் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

    “கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மூத்த நிர்வாகிகள் (சீனியர்கள்) இப்போது அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும். அப்போதுதான் கட்சி புதிய ரத்தத்தோடு, கூடுதல் வேகத்துடன் செயல்பட முடியும்” என்பது இளைஞரணியினரின் பரவலான கருத்தாக உள்ளது.

     கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிடாமல் தடுப்பதோடு, தங்களது குடும்பத்தினரையே அடுத்தடுத்து அதிகார மையமாக்கி வருவதால், களமிறங்கி வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்காமல் தடுக்கப்படுவது குறித்தும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞரணியினர் அதிரடியாக கருத்து தெரிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    தோல்வியில் இருந்து திமுக பீனிக்ஸ் பறவை போல் எழும் என நம்பிக்கை தெரிவிக்கும் இளைஞரணியினர் அதற்கான பாதையையும் திமுக தலைமை உருவாக்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    எம்.செய்யது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?” – திமுகவுக்கு விசிக பதிலடி..!
    Next Article தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி –  காங்கிரஸ் அமைச்சர்கள் உறுதி
    Editor TN Talks

    Related Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.