Author: Editor TN Talks
தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 2026-2029ஆம் ஆண்டு பதவிக்கான தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட 21 பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. இயக்குனர் சேரன் தலைமையில் நம்ம கே.பாக்கியராஜ் அணியும், இயக்குனர் வி.சி.குகநாதன் தலைமையில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியும் போட்டியிட்டன. தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 432 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4.15 மணிக்கு நிறைவு பெற்றது. ஜாக்குவார் தங்கத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அனுமதியுடன் அவரும் வாக்களித்தார். மொத்தம் 432 வாக்குகள் பதிவான நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படது. இதில் நம்ம பாக்யராஜ் அணி…
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் கோஹ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பாரதி என்ற பெண் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரது உடலை அறுவை சிகிச்சை அறையிலேயே விட்டுவிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் வெளியேறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியமே மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சை அரங்கிலேயே இறந்த பெண்ணின் உடலைப் போட்டுவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னாள் அதிமுக எம்.பி, கே.சி.பழனிசாமி தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; – தவெக அரசு அமைந்ததும் சட்டமன்றத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் முதலில் பாடப்பட்டு, இறுதியில் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது, விமர்சனங்களைத் தவிர்ப்பதோடு மத்திய அரசையும் அனுசரிக்கும் வகையில் ஒரு முடிவை தவெக எடுத்தது. அதேபோல், அன்புமணி ராமதாஸ் கூறிய நவம்பர் 1 மற்றும் திமுக கூறிய ஜூலை 18 ஆகிய இரண்டு தினங்களிலும் தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறீர்கள். மேகதாது அணை விவகாரத்திலும், “தீர்ப்பாயம் வேண்டும்” என்று திமுக கூறிய நிலையில், அதற்கும் தேவையான திருத்தங்களைச் செய்கிறோம் என்று கூறுகிறீர்கள். எதிலும் நீங்கள் பின் விளைவுகளைப் பார்ப்பதில்லை. உங்களுக்கென்று ஒரு கொள்கையோ, தெளிவான பார்வையோ இருப்பதாகத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் அதற்கேற்ப தலையாட்டாமல், உங்களுக்கென ஒரு சித்தாந்தமும் தெளிவான அரசியல் பார்வையும் இருக்க வேண்டும். இவ்வாறு கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தொகுதி மறுவரையறை தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;- தொகுதி மறுசீரமைப்பு (Delimitation): தமிழ்நாடு இழக்கிறதா? உண்மை என்ன என்று மட்டும் பார்ப்போம். Delimitation என்பது மக்கள்தொகை மற்றும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லைகளையும் மறுசீரமைக்கும் அரசியலமைப்புச் செயல்முறையாகும். தற்போது விவாதிக்கப்படும் மாதிரியில், மக்களவை உறுப்பினர்கள் 543-இல் இருந்து 816-ஆக உயர்த்தப்படுகின்றனர். அதாவது, 273 புதிய இடங்கள். சுமார் 50% உயர்வு. தமிழ்நாட்டிற்கு என்ன கிடைக்கிறது? தற்போது 39 மக்களவை உறுப்பினர்கள். புதிய முன்மொழிவு 59 மக்களவை உறுப்பினர்கள். அதாவது,தமிழ்நாட்டிற்கு 20 புதிய மக்களவை இடங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் தேசிய பங்கு குறைகிறதா? இல்லை. தற்போது 39 / 543 = 7.18% புதிய முன்மொழிவு 59 / 816 = 7.23% முக்கியமாக, தமிழ்நாட்டின் தேசிய பிரதிநிதித்துவ விகிதம் குறைவதில்லை. மாறாக, 7.18% இருந்து 7.23% ஆக சிறிய அளவில் உயர்கிறது.…
58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (International Chemistry Olympiad) போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு வரலாற்றுச் சாதனையைப் படைத்த மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லார் மற்றும் சந்தீப் குச்சி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவின் சிறந்த செயல்திறனை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்திய இளைஞர்களின் திறமை உலக அரங்கில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நமது மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் அறிவியல் மீதான ஆர்வம் ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்பட வைத்துள்ளது. இந்த வெற்றி, வேதியியல் துறையில் மேலும் பல இளம் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று சிறந்து விளங்க ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய…
நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாக புதிய வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த சூழலில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “இறுதியில் மன அமைதியை அடைவதற்காக, முடிவுக்கு வந்த சில பாதைகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ✂️🤍 இன்று, அந்த மன அமைதி என்னை வந்தடைந்துள்ளது. இனிமேல் என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை. எந்த பயமும் இல்லை. என்னை நான் மீண்டும் கண்டுபிடித்து, ஒருகாலத்தில் என்னுடையது என்பதை மறந்துவிட்ட வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். நீண்ட நாட்களாக சொல்ல வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம் இருக்கிறது… மிக நீண்ட காலமாக சொல்ல…
புதுடெல்லி, ஜூலை 19: இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சான்சிபார்(Zanzibar) அதிபரும் புரட்சிகர கவுன்சிலின் தலைவருமான டாக்டர் ஹுசைன் அலி ம்வினி(Dr. Hussein Ali Mwinyi)யுடன் இன்று உபராஷ்டிரபதி பவனில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், இந்தியா–தான்சானியா இடையேயான நீண்டகால நட்புறவும், குறிப்பாக சான்சிபாருடன் இந்தியா பகிர்ந்து வரும் பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார், கலாச்சார மற்றும் மக்களிடையேயான உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன. மேலும், வர்த்தகம், முதலீடு, வளர்ச்சிக் கூட்டாண்மை, சுற்றுலா, நீல பொருளாதாரம் (Blue Economy), கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பன்முக சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, சென்னை ஐஐடி வளாகத்துக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் ஹுசைன் அலி ம்வினி, ஐஐடி மெட்ராஸ் – சான்சிபார் வளாகம் அமைப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு…
உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் நிரூபித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி. ஒரே ஒரு கையால் சைக்கிளை இயக்கி, இதுவரை 67 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் மேற்கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமீம் அன்சாரி, இன்று பலருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வருமானமின்றி தவித்த தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக முதன்முதலாக சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் அதை சமூக விழிப்புணர்வுப் பயணமாக மாற்றினார். இன்று அவரது பயணம், சாதனைகளின் வரலாறாக மாறியுள்ளது. காஷ்மீரின் அமைதியான பள்ளத்தாக்குகளிலிருந்து கன்னியாகுமரியின் தென்கோடி முனை வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். தனது சாதனைப் பயணம் குறித்து பேசிய…
“மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்து வழங்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘அலிம்கோ’ (ALIMCO)-வின் கிளை அலுவலகத்தை, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அமைக்கப் போராடிப் பெற்றதும், அதற்கான அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைப்பதற்கான இடத்தைப் பெற்றுள்ளதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதனை எனக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் கூறியுள்ளதாவது;- மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவதில், மதுரை மாவட்டம் தேசிய அளவில் முதன்மையான பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக கடந்த 6 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது. “மாற்றும் மதுரை” என்னும் பெயரில், மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டன. ஒன்றிய அரசின் சமூகநலன் மற்றும் அதிகாரம் வழங்கல்துறை, மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மிக…
டெல்லி ஜந்தர் மந்தரில் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது நாளில் காவல்துறையால் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மருத்துவமனையில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு முதல் முறையாக செய்தி அனுப்பியுள்ளார். அதில், ஜந்தர் மந்தரில் இருந்து தன்னை அகற்றியது “சட்டவிரோத காவலில் வைப்பதற்கு சமம்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஜூலை 20-ஆம் தேதி நடைபெற உள்ள Cockroach Janta Party (CJP)-யின் நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த இயக்கத்தை “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்” என்று வர்ணித்துள்ள சோனம் வாங்சுக், “அச்சமற்ற இந்தியா, அநீதியற்ற இந்தியா” உருவாக வேண்டும் என்றும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார். அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ மூலம் இந்தக் கைஎழுத்து குறிப்பை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். நீட் (NEET) தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், கல்வித் தேர்வு முறையில்…