சமூக நீதி துறை அமைச்சர் வன்னிஅரசு திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள சமூகநீதி விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தினார்,
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள அரசு கல்லூரி பெண்கள் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு மாணவியரிடம் உணவு, தங்கும் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்து அவர்களோடு அமர்ந்து உணவுருந்தினர்.
ஆய்வின்போது செயற்பொறியாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட தாட்கோ மேலாளர் அனீத்விமலி மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் சமூக நீதித்துறையின் கீழ் கட்டி வரும் விடுதிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
ஏற்கனவே கோவையில் கட்டி வரும் விடுதியை ஆய்வு செய்துள்ளோம். தற்பொழுது திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கட்டி வரும் விடுதி ஆய்வு செய்துள்ளோம்.
மாணவர், மாணவிகளின் நலன் கருதி அவர்களுக்கு வசதியாக தங்கி படிப்பதற்கான வாய்ப்பாக உள்ள விடுதிகளை விரைவாக கட்டி முடிப்பதற்க்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் சமூக நீதி விடுதிகள் இல்லாத மாவட்டங்கள் உள்ளது. அதனை கண்டறியப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மூன்று இடங்களில் விடுதிகள் இல்லாமல் இருக்கிறது அதற்கான திட்ட அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உணவின் தரம் குறித்து அறிவதற்காக அதனை புகைப்படம் எடுத்து அனுப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கு தான் இந்த ஏற்பாடு.
அதிகாரிகள் சரியாக செய்து விடுவார்கள் என்று மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்பதற்கு எச்சரிக்கையாக மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் இந்த முன்னேற்பாட்டை செய்துள்ளோம்.
சமூக நீதி விடுதிகளில் சத்தான உணவுகள் தானிய வகைகள் கொடுப்பதற்கு புரோட்டின் ,கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை கொடுப்பதற்கு மில்லட்ஸ் கொடுப்பதற்கு நல்லது என்பதை கலந்து ஆலோசித்து வருகிறோம்.
ஏற்கனவே மில்லட்ஸ் கொடுக்கும் விடுதிகள் இயங்கி வருகிறது. அதனைப் பார்த்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் மாணவர்கள் சத்தான உணவுகள் சாப்பிட்டு படிக்கும்பொழுது சோர்வு ஏற்படாது என்றார். கட்டாயம் அதற்காக இந்த விடுதிகளை மேம்படுத்துவோம் என தெரிவித்தார்.
கேரள உள்துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சரை வந்து சந்தித்து போதை ஒழிப்பு குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே போதை ஒழிப்பு இல்லாத தமிழ்நாடு உருவாக்குவதற்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
சிங்கப்பெண் திட்டம் மற்றும் போதை ஒழிப்பை காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வரை ஒருமையில் பேசுவது குறித்து கேள்விக்கு,
நாகரிகமான அரசியல் நோக்கி நகர வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. எவ்வளவு மோசமான விமர்சனம் செய்தாலும் அதனை நாகரிகமாக எதிர்கொள்ள கூடிய அரசியலை தான் முன்னெடுத்து எங்கள் தலைவரும் அதையே தான் குறிப்பிட்டுள்ளார்.
நாகரிகத்துடன் பேச வேண்டிய பொறுப்பு உள்ளது. அரசியலில் அடுத்தடுத்த தலைமுறை இதை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒருமையில் முதல்வரை பேசுவது, தரம் தாழ்த்தி பேசுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரும்புவும் மாட்டார்கள். அந்த வகையில் அந்த கட்சியின் தலைவர்கள் முதலில் தொண்டர்களுக்கு அறிவுறுத்த இருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசினால் அதை ஏற்றுக்கொள்வார்களா? அவரது கட்சியினர் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
மற்ற கட்சி தொண்டர்களை ஒருமையில் பேசக்கூடாது. மரியாதையுடன் நாகரிகத்தோடு பேச சொல்லிக் கொடுக்க வேண்டும் தேவையில்லாத சர்ச்சை இருக்காது.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மாற்றத்திற்கு எங்கள் தலைவர் மீது அவதூறு பரப்புவது தவறு. எங்கள் தலைவர் எந்த நிர்வாகத்திலும் எந்த ஆட்சியிலும் பரிந்துரை செய்ததில்லை. அது நிர்வாகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கும். நேற்று கமிஷனர் ஆக இருந்தார், இன்று லஞ்ச ஒழிப்பு இயக்குனராக இருந்தார். இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள நாளை அவர் வேறு ஒரு பதவிக்கு மாற்றப்படுவார்.
தவெக கூட்டணி குறித்து கேள்விக்கு …….
ஏற்கனவே முதல் கட்ட கூட்டம் நடைபெற்று உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத்திற்கு பிறகு எங்கள் கட்சியின் தலைவர் முடிவு செய்வார்.
அவருக்கு அடுத்து இருப்பவர்கள், தொண்டர்கள். இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. எங்கள் கட்சிக்கு உச்சகட்ட சுப்ரீம் லீடர் அவர்தான் அவர்தான் முடிவு எடுப்பார்.
