Author: Editor TN Talks
இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என் மக்களை விட்டு ஒருபோதும் பிரிந்ததில்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். டெல்லியில் தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகம் (Foreign Correspondents Club of South Asia) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேசத்தின் நிலை குறித்து வேதனையுடன் பேசினார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக என் அன்பு வங்கதேசம் துயரத்தில் இருப்பதை பார்த்து வருகிறேன். 1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் 30 லட்சம் பேர் உயிர்தியாகம் செய்து உருவாக்கிய வங்கதேசம் இதுவல்ல” என்று அவர் உருக்கமாகக் கூறினார். 2024-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசிய அவர், “அது அமைதியான மாணவர் போராட்டம் அல்ல. ஆரம்பத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மற்றும் சட்டப்பூர்வ…
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிவசாகர் மாவட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். வெள்ளப் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஜே.பி. நட்டா, இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசும், அசாம் மாநில அரசும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் உறுதுணையாக நிற்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் மீன்வளத் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 444 ஆம் ஆண்டு திருவிழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பின்னர், சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து பின்பு பனிமய மாதா பேராலயம் வந்து வழிபாடு நடத்தினார். மாதாவிற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பனிமய மாதா பேராலய 444 ஆம் ஆண்டு திருவிழாவுக்கு வந்துள்ள அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் பட்ஜெட் நன்றாக உள்ளது. எங்களுடைய மீன்வளத்துறைக்கான மானிய கோரிக்கை இன்னும்…
தமிழ்நாட்டின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக பட்ஜெட் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் (₹710 கோடி) மற்றும் மாதிரிப் பள்ளிகள் (₹125 கோடி) மூலம் கல்வியிலும், கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினி’ (₹2,000 கோடி) திட்டம் மூலம் டிஜிட்டல் கற்றலிலும், பெண்களுக்கு ‘அண்ணன் சீர்’ (₹812 கோடி) மற்றும் சிங்கப்பெண் படை மூலம் மகளிர் நலனிலும் தொலைநோக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், இளைஞர் நலன், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் AI நகரம் ‘அறிவகம்’ மற்றும் திருநெல்வேலி-தூத்துக்குடி ‘விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்’ போன்ற அறிவிப்புகள் மனிதவள மேம்பாட்டிற்கும் தென் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் வலு சேர்ப்பதாகக் கூறியுள்ளார். உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு (₹8,393 கோடி), ‘வெற்றி மடிக்கணினி’ (₹2,000…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது… காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும். காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல. அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு வைகோவைப் புகழ்ந்து பேசினார். தங்களுக்கு, திசை காட்டி, வழிகாட்டி, கலங்கரை விளக்கம் எல்லாம் வைகோதான் எனக் கூறியவர், இந்த புத்தகம் என்பது வைக்கோ என்ற parlementarian-டைய documentation அல்ல; இந்தியா என்ற பெருந்தேசத்தின் நாடாளுமன்றத்தினுடைய சரித்திரத்தின் ஒரு பகுதி இந்த புத்தகம் எனக் குறிப்பிட்டார். தனக்கு தெரிந்து, தொண்டர்களின் காசில் வீடு கட்டிய தலைவர்கள் மத்தியில், தலைவர் ஒருவர் தன் காசில் தொண்டர்களுக்கு வீடு கட்டிவர் வைகோ என்றார். தான் மட்டும் அமைச்சராக மட்டும் இல்லையென்றால் இந்த அரங்கத்தின் கடைசி வரையில் நின்று அண்ணன் வைக்கோ வாழ்க என்று பார்வையாளனாக வந்திருப்பேன் என துரை வைகோவிடம் தெரிவித்ததாகக் கூறினார். இங்கு நான் அமைச்சராக இல்லை, முதலமைச்சர் ஜோசப் விஜய்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைகோவை பாராட்டிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது… “முதலில் வைகோவுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஆற்றிய உரைகளுக்காகவோ அல்லது இந்த நூலுக்காகவோ மட்டும் அல்ல; தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்துள்ள கொள்கை உறுதிக்காகவும் அவரை வாழ்த்துகிறேன்.” “ஒரு அரசியல்வாதியை மதிப்பிடும்போது நான் முதலில் பார்ப்பது அவரின் கொள்கை நிலைத்தன்மையைத்தான். அவர் நம்பும் கருத்துகளில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா, அல்லது ஒரு நாள் ஒரு கருத்து, மறுநாள் வேறு கருத்து என்று மாறுகிறாரா என்பதையே கவனிப்பேன். அந்த வகையில், நமது நாட்டின் மிகவும் கொள்கை உறுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வைகோ திகழ்கிறார்” “வைகோவுக்கு தற்போது 82 வயதாகிறது. ஆனால் அவர் இன்னும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கும் மாணவராக இருக்கிறார். தொடர்ந்து…
நாடு முழுவதும் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) உள்ளிட்ட இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை விரைவாக மீட்டுத் தரவும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் டிஜிட்டல் கைது மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள்’ தொடர்பாக தாமாக முன்வந்து (Suo Motu) எடுத்த வழக்கை விசாரித்தபோது இந்த உத்தரவுகளை வழங்கியது. சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள், குறிப்பாக ‘மியூல் கணக்குகள்’ (Mule Accounts) தொடர்பாக செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறை (Standard Operating Procedure – SOP) ஒன்றை உருவாக்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த SOP-யை அனைத்து உயர்நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.…
உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அப்பகுதி ஆளுநர் ஆண்ட்ரேய் வோரோபியோவ் தெரிவித்துள்ளார். 2022-ல் ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து மாஸ்கோ பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலாகக் கருதப்படுகிறது. ஆளுநர் வோரோபியோவ் தனது டெலிகிராம் பதிவில், மாஸ்கோவின் தெற்கே உள்ள செகோவ் (Chekhov) மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், தொழிற்பேட்டையில் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதுடன், நிர்வாகக் கட்டிடம் மற்றும் மின்துணை நிலையமும் சேதமடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், சோல்னிஷ்கோவோ (Solnyshkovo) கிராமத்தில் ஒரு வீடும், ஒரு வாகனமும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஒரே இரவில் குறைந்தது 320 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் மாஸ்கோ மற்றும் லெனின்கிராட் பகுதிகளில் பறந்த ட்ரோன்களும் அடங்கும். லெனின்கிராட் ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ, தங்கள் பகுதியில்…
இடதுசாரி கட்சிகளின் 4 ஆவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தி.நகரில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளுடைய மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த மாநில அளவிலான ஒரு பேரணியை அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களை திரட்ட உள்ளனர். மேலும் இந்தப் பேரணியில் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியிலே கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு விரிவான கோரிக்கை பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்திலே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, இந்திய கம்யூனிஸ்ட்…