Author: Editor TN Talks

ஆபாச பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதை கலாய்க்கும் வகையில் தண்ணில கண்டனம் என தவெக ஐடிவிங் பதிவிட்டுள்ளது. அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என தவெக ஐடி விங் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக எனவும், திமுகவின் இன்றைய தியாக முழக்கம், அய்யய்யோ, எம்மா எம்மா! அய்யய்யோ எம்மா எம்மா எனவும் கிண்டல் பதிவிட்டுள்ளது. மேலும்,  தண்ணில கண்டம் என உதயநிதியை கலாய்த்து சினிமா போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Read More

 தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்காக தவெகவுக்கு நன்றி என்றும் எனது பொறுப்பை நான் செவ்வனே செய்வேன், தவெகவுக்கு பீரங்கியாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அவ்வாறு பேசினால் கைது செய்யாமல் என்ன செய்வார்கள்?  சம்பந்தமில்லாத நடிகையை பற்றி பேசுகிறார்கள் என்றார். மேலும் பேசுவதை பேசிவிட்டு காவிரியை கூறினேன் என குறிப்பிடுகிறார் உதயநிதி என்றும் காவிரி தாயையும் அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பேசுவது நன்றாக இல்லை என்ற அவர் சட்டசபையிலும் பெண்கள் அதிகம் உள்ளார்கள் அங்கு விட்டால் அங்கும் அப்படி தான் பேசுவார்கள் என்றார். திமுகவினருக்கு தோற்ற வெறி அடங்கவில்லை என விமர்சித்த புகழேந்தி, தமிழக முதல்வரை வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் தான் கூறுகிறார். அப்படி என்றால்…

Read More

மக்களவையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026 மாநிலங்களவையில் விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை காலதாமதமின்றி மேற்கொள்ள ஊக்குவிப்பதுடன், தாமதமாக பதிவு செய்யப்படும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதாகும். 1969-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில், 2023-இல் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, தற்போது மேலும் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஒரு ஆண்டுக்குப் பிறகும், இரண்டு ஆண்டுக்குள்ளும் பதிவு செய்ய வேண்டுமெனில், மாவட்ட ஆட்சியர் (District Magistrate), துணை மாவட்ட ஆட்சியர் (Sub-Divisional Magistrate) அல்லது மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட் ஆகியோரின் உத்தரவு மற்றும்…

Read More

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை, மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய அமலாக்கத் துறை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவிவகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்த அமலாக்கத் துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பாக விசிக தலைவர் தொல் . திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே  முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது,  ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு – கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காவல்துறையை ஏவி கைது செய்த ஆளும் தவெக அரசின் ஜனநாயக படுகொலையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வன்மையாகக் கண்டித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டெல்டா விவசாயிகளை கண்ணீர் சிந்த வைத்து, மேகதாது அணை கட்டுவதை தடுக்க திராணியற்று, தமிழ்நாட்டிற்கு தீங்கு இழைப்போரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரை, விவசாய சங்கங்களுடன் இணைந்து கண்டித்த நம் எதிர்க்கட்சித் தலைவரை, தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக கைது நடவடிக்கையை  ஆளும் தவெக அரசு மேற்கொண்டுள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் மற்றும் ஆளும் தவெக அரசின் கையாலாகாத தனம் குறித்து கேள்வி எழுப்பக்கூடும் என்பதை நினைத்து, அச்சத்தின் மிகுதியால் உள்ள அரசின் உச்சபட்ச கோழைத்தனம் இது என விமர்சித்துள்ளார். ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சரின்…

Read More

உதயநிதியின் அநாகரிகப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவரை கைது செய்துள்ள தவெக அரசையும் கடிந்துரைத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது… சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலினை, காவல்துறை கைது செய்திருக்கிறது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர்…

Read More

தமிழக அரசியலில் பெண்களை தொடர்புபடுத்தி பேசப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அரசியலில் இருக்கும் ஆண்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாத பெண்களை அரசியல் விவாதங்களில் இழுப்பது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அரசியல் மேடைகளில் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேச முடிந்ததற்கு காரணம், அதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டதுதான். ஒருமுறை அல்ல, பலமுறை அவ்வாறு பேச அனுமதிக்கப்பட்ட பிறகே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்து குறித்து, “அவர் பேசியதன் மறைபொருள் எனக்கு முதலில் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் பின்னர் விளக்கினார். அது தண்ணீர் இணைப்பு (Water Connection) பற்றிய பேச்சு என முதலில் நினைத்தேன். பெரும்பாலான பெண்களுக்கும் அதன் உண்மையான அர்த்தம்…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… தஞ்சையில்  நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையை முன்னிறுத்தி, அவரை இன்று காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு, எதிர்க்கட்சிகளைத் தனிப்பட்ட விரோத மனப்பான்மையுடன் அணுகுவது தடுக்கப்பட வேண்டும்; தனிநபர் தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டும்.  இவ்விவகாரத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கால அவகாசம் கோரியுள்ள சூழலில், நீதிமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளி அவசர அவசரமாக இக்கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. குறிப்பாக, அரசின் முதல் பட்ஜெட்  தாக்கல் செய்யப்படவிருக்கும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது சரியல்ல. அரசியல் மேடைப் பேச்சுக்களில் வரம்பு மீறல்கள் இருப்பதாகக் கருதினால், சட்டத்திற்குட்பட்டு வழக்குத் தொடுத்து நீதிமன்றம் வாயிலாக எதிர்கொள்வதே முறையான வழிமுறையாகும்.…

Read More

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து தஞ்சாவூர் கூட்டத்தில் அநாகரிகமாகப் பேசிய புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் வைத்து கைது செய்த தஞ்சாவூர் போலீசார் அவரைக் காவல் துறை வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், உதயநிதியைக் கண்டித்தும் தவெகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் கைது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் ஆர்.எஸ். பாரதி டி கே எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Read More