Author: Editor TN Talks

இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உஸ்பெகிஸ்தான் குடியரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைதோவ் பக்தியோர் ஒடிலோவிச் (Saidov Bakhtiyor Odilovich), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திங்கள்கிழமை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இந்த உயர்மட்ட சந்திப்பில், இந்தியா – உஸ்பெகிஸ்தான் உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து வர்த்தகம், அரிய மண் தாதுக்கள் (Rare Earth Minerals), கல்வி பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்று மற்றும் நாகரிகத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும் அவரது குழுவினரையும் வரவேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையேயான உறவு பண்டைய பட்டுப் பாதை (Silk Road) வர்த்தக வழித்தடங்களின் மூலம் பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகக் குறிப்பிட்டார். மேலும், “இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் வரலாறு, கலாசாரம் மற்றும் நாகரிக அடிப்படையில் ஆழமான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கட்டிடக்கலை,…

Read More

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ்தளப் பதிவில், எம்பெருமான் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியுள்ளது, அளவில்லா மகிழ்ச்சியையும் பூரண மனநிறைவையும் தருவதாகக் கூறியுள்ளார். முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதற்காக, யார் எத்தனை வழக்குகளை தொடுத்தாலும், எத்தனை பராக்கிரமசாலிகளை வாதிட அழைத்து வந்தாலும் இறுதியில் இறை நம்பிக்கையும், இயற்கையின் நியதியுமே வெல்லும் என்பதற்கான உதாரணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். தங்களின் வாக்கு வங்கிக்காக, “மதச்சார்பின்மை” என்ற பெயரில், இந்துக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடியவர்களின் மூளை குழம்பிப் போகுமளவுக்கு குட்டு வைத்து அனுப்பியுள்ள, உச்சநீதிமன்றத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், “ஒடியா விழவின் நெடியோன் குன்றம்” என நமது சங்ககாலப் பாடலான அகநானூறு பெருமையுடன் பாடும், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தீபத்தூண், கார்த்திகை தீபத்தால்…

Read More

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி பகுதியைச் சேர்ந்த காஷ்மிரா ஷேக் என்ற பெண்ணின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.100 கோடிக்கு நெருக்கமான தொகை இருப்பதாகக் காட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எளிமையான வாழ்க்கை வாழும் காஷ்மிரா ஷேக், அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவரது கணவர் கொல்கத்தாவில் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், காஷ்மிரா வீட்டிலிருந்தபடியே ஜரி எம்பிராய்டரி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சமையல் எரிவாயு (LPG) மானியத் தொகை தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வங்கிக்குச் சென்றபோது, தனது கணக்கில் ரூ.100 கோடிக்கு நெருக்கமான தொகை இருப்பதாகக் காட்டப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பதற்றமடைந்த காஷ்மிராவும், அவரது கணவரும் குல்தாலியில் உள்ள ஜம்தாலா கிளை அரசுடைமை வங்கிக்குச் சென்று விளக்கம் கேட்டனர். ஆனால், வங்கி அதிகாரிகள்…

Read More

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம்  செல்லும் நுழைவுவாயில் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் தெரு நாய் பிடிக்கும் பிரிவை சார்ந்த ஊழியர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் கடந்த 3,4 நாட்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துள்ளனர். இதில் இன்று முதலமைச்சர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 6-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்தனர். தலைமைச் செயலகத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து மானிய கோரிக்கையும் நடைபெற உள்ளது. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள நாய்களை பிடித்து…

Read More

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான  ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய பாலாஜி, கமலி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் கூட்டாக மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாவீரர் தீரன் சின்னமலை 221வது நினைவு நாளில் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில்  அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் 1992ம் ஆண்டு முதன்முதலில் தீரன் சின்னமலையின் வரலாற்று புத்தகத்தை வெளியிட்டு மணி மண்டபத்தை அமைத்தார். தவெக தலைவர் விஜய் ஆட்சியில், ஒவ்வொரு தலைவருக்கும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில்…

Read More

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப் பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை 2024-ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கான கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி  நெம்மேலிக்கு சென்று  இத்திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்பு பணி நடப்பதாகக் கூறி ஸ்டாலினின் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கல்வெட்டு வலையால் மறைக்கப்பட்டிருந்தது. இந்த வலையைச் சேதப்படுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல்.இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.…

Read More

மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மோடி ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது…. ‘உலக சமத்துவமின்மை ஆய்வகம்’ என்ற அமைப்பு வெளியிட்ட, ‘2026 உலக சமத்துவமின்மை’ அறிக்கையில், ‘இந்தியாவின் மொத்த செல்வத்தில், 40 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடு இந்தியா’ என்பது ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. 50 சதவீத மக்களுக்கு, 15 சதவீத வருமானமே செல்கிறது. இந்தியாவில் ‘வருமானம், செல்வம், பாலினம்’ ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது’ என்று, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், சமூக நீதியை விரும்பும் அனைவருக்கும், இது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போல உள்ளது. ‘இந்தியாவில்…

Read More

மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவதாகக் கூறியுள்ளார். கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,  விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று! ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக…

Read More

சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர்  பார்த்திபன் தாக்கல் செய்த பொது நல  மனுவில், சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது; ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது; தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு…

Read More

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். தும்பைப்பட்டி நான்குவழிச் சாலை மேம்பாலம் பகுதியில், சென்னையில் இருந்து  திருநெல்வேலி நோக்கி 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, மேம்பாலம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் சென்று எதிரே, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், சென்னையில் இருந்து திருநெல்வேலி  நோக்கி சென்ற கார் அப்பளம் போல நொறுங்கி, காரில் பயணம் செய்த சென்னை வாடிபாக்கத்தைச் சேர்ந்த ஶ்ரீராம் உட்பட 2 ஆண்கள், மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி, ரஞ்சனா ஆகிய 2 பெண்கள், பிரணிகா என்னும் 3 வயது…

Read More