Close Menu
    What's Hot

    அதானி அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி… மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் –  மாணிக்கம் தாகூர் விமர்சனம்

    தீரன் சின்னமலை நினைவுநாள்… முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீரவணக்கம்

    பிரிஜ் பூஷண் வழக்கில் தீர்ப்பு.. ‘போதிய ஆதாரம் இல்லை’ என விடுதலை செய்த நீதிமன்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேலூர்; சாலை விபத்தில் பெண் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு…
    Featured

    மேலூர்; சாலை விபத்தில் பெண் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 accidetn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தும்பைப்பட்டி நான்குவழிச் சாலை மேம்பாலம் பகுதியில், சென்னையில் இருந்து  திருநெல்வேலி நோக்கி 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது, மேம்பாலம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் சென்று எதிரே, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இதில், சென்னையில் இருந்து திருநெல்வேலி  நோக்கி சென்ற கார் அப்பளம் போல நொறுங்கி, காரில் பயணம் செய்த சென்னை வாடிபாக்கத்தைச் சேர்ந்த ஶ்ரீராம் உட்பட 2 ஆண்கள், மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி, ரஞ்சனா ஆகிய 2 பெண்கள், பிரணிகா என்னும் 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், இதே காரில் பயணம் செய்த ஒரு ஆண், மற்றும் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரில் பயணம் செய்த ஒரு ஆண் உட்பட 2 பேர் பலத்த காயத்துடன், மேலூர் தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

    Fatal Crash Girl Child Melur Road Accident Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூரில் அதிர்ச்சி!. போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி!. காவல் உதவி ஆய்வாளர் மனைவி உள்பட 4 பேர் கைது!
    Next Article காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!
    Editor TN Talks

    Related Posts

    அதானி அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி… மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் –  மாணிக்கம் தாகூர் விமர்சனம்

    August 3, 2026

    தீரன் சின்னமலை நினைவுநாள்… முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீரவணக்கம்

    August 3, 2026

    பிரிஜ் பூஷண் வழக்கில் தீர்ப்பு.. ‘போதிய ஆதாரம் இல்லை’ என விடுதலை செய்த நீதிமன்றம்!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதானி அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி… மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் –  மாணிக்கம் தாகூர் விமர்சனம்

    தீரன் சின்னமலை நினைவுநாள்… முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீரவணக்கம்

    பிரிஜ் பூஷண் வழக்கில் தீர்ப்பு.. ‘போதிய ஆதாரம் இல்லை’ என விடுதலை செய்த நீதிமன்றம்!

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.