Author: Editor TN Talks
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் வகையில் விரிவான திட்டங்கள் தயாராக உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அரசுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஈரானின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கலாம் என்ற தகவல்களை “பைத்தியக்காரத்தனமான செயல்” என்று விமர்சித்தார். மேலும், “அமெரிக்காவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகளை தாக்குவதற்கான விரிவான பதிலடி திட்டங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன. அவற்றை நிறைவேற்றும் திறனும், உறுதியும் ஈரான் ஆயுதப் படைகளிடம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு…
மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிறுமி, தற்போது கைகூப்பி மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “போராட்டத்தில் சிலரின் தூண்டுதலால் பிரதமர் குறித்து மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினேன். எனக்கு இப்போது அதற்காக மிகுந்த வருத்தமாக உள்ளது” எனக் கூறும் சிறுமி, “எனக்கு வெறும் 15 வயதுதான். நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. இது என்னுடைய முதல் மற்றும் கடைசி தவறு. நாடு முழுவதுமுள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எனது செயலுக்காக மிகவும் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) வயது 25 என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மன்னிப்பு வீடியோவில் தனக்கு 15 வயது மட்டுமே என சிறுமி கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த புதன்கிழமை, மாணவர்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் பொது நல வழக்கு தொடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழை காண்பித்தார். அப்போது, நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இதுபோல சான்றிதழ் கோரும் நபர்களும் பயனடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, இதுசம்பந்தமாக பொது நல வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்று பெறும் வகையில், சட்டம், அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பார்த்திபன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள்…
கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுத்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறை என்று தமிழக சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த அமைச்சர், வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசித்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். மேலும், காவிரி பிரச்சினையில் ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். மின்சாரத் துறையில் கள உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிய அவர், புதிய பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே…
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமக்கள் மட்டுமல்லாமல், திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்கள், ஆலய உதவியாளர்கள் என முக்கிய பங்கு வகித்த அனைவரும் இரட்டையர்களாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கனாச்சேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த திருமணத்தில், அகில் கே. தாமஸ் தனது இரட்டைச் சகோதரரான நிகில் கே. தாமஸ் உடன் திருமண மேடையில் நின்றார். அதேபோல், மணப்பெண்களான மேகி மேரி தாமஸ் மற்றும் அவரது இரட்டைச் சகோதரி மரியா மேரி தாமஸ் ஆகியோரும் ஒரே நேரத்தில் மணமக்களாக களமிறங்கினர். இந்த திருமணத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரட்டை பாதிரியார்கள் பிதா ஆன்டோ பெழும்காட்டில் மற்றும் பிதா அஜோ பெழும்காட்டில் ஆகியோர் திருமணச் சடங்குகளை நடத்தி வைத்தனர். மேலும், பலாவைச் சேர்ந்த ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோஹோன் ஜேம்ஸ் என்ற இரட்டை சகோதரர்கள் ஆலய உதவியாளர்களாக (Altar Boys) பணியாற்றினர்.…
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம்…
தேசிய சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி நிரந்தர வைப்பீடுகள் வசூலிக்கப்பட்டதாக திருவள்ளுவர் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த திலகவதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் உறுப்பினராக இருக்கும், தனியார் கூட்டுறவு சங்கமான திருவள்ளுவர் போக்குவரத்கது கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம், அனுமதியின்றி இந்தியா தேசிய சின்னத்தை தவறாக பயன்படுத்தி 500 கோடி ரூபாய் அளவுக்கு நிரந்தர வைப்பீடுகளை வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திலும், லஞ்ச ஒழிப்புத் துறையிடமும், கடந்த ஜூன் 12 ஆம் தேதி புகார் அளித்த நிலையில், தேசிய சின்னத்தை மட்டும் அகற்றி உள்ளதாகவும், நிரந்த வைப்பீடுகளை வசூலித்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து…
காவிரி விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தனது எக்ஸ்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம் என மு.க.ஸ்டாலின் பதிந்துள்ளார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார் என விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி காவிரி நீர்…
திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள பொங்குசனீஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி, கோவில்வாசலில் இருந்தவரின் உடுக்கையை வாங்கி இசைத்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர்மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவிலுக்கு சனிக்கிழமையையொட்டி வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகைதந்தனர் , இதில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி கோவிலுக்கு வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவில் வெளிப்பகுதியில் உடுக்கை அடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்தவர் முன் அமர்ந்து அவரைப் பாடச்செய்து, அதற்கேற்ப உடுக்கையை இசைத்தார் , அவரது எளிமையும், தன்னிச்சையான இசை நிகழ்வும் அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது , இதையடுத்து டிரம்ஸ் சிவமணியுடன் பக்தர்கள் பலர் செல்போனில் செல்ஃபி எடுத்து கொண்டனர் .
கட்சி நிகழ்வுக்காக சென்னை வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 10நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக சென்னைக்கு வந்த ராகுல்காந்திக்கு, விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் வந்தடையும் ராகுல்காந்தி பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார் எனவும், தொடர்ந்து தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவருடனும் அவர் கலந்துரையாட உள்ளதாகவும், அப்போது அரசியல் வியூகங்கள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.