Close Menu
    What's Hot

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தனிமைப்பட்டு நிற்கிறார் தனி ஆவர்த்தன முதலமைச்சர்… எப்போது அனைத்துக்கட்சி கூட்டம்? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    Featured

    தனிமைப்பட்டு நிற்கிறார் தனி ஆவர்த்தன முதலமைச்சர்… எப்போது அனைத்துக்கட்சி கூட்டம்? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026Updated:August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

    தனது எக்ஸ்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும்  மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம் என மு.க.ஸ்டாலின் பதிந்துள்ளார்.

    தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார் என விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்,

    தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள் என பகடி செய்துள்ளார்.

    இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின்,

    நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.

    ஆனால்,  தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? என வினா எழுப்பியுள்ளார்.

    All Party Meeting Chief Minister DMK M.k. stalin Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசத்துணவில் “சிக்கன் பிரியாணி”!. புரோட்டீன் ரொம்ப முக்கியம்; அரசியல் செய்யாதீர்கள்!. அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
    Next Article திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    August 1, 2026

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    August 1, 2026

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.