Close Menu
    What's Hot

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    “எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு

    ’பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம்… ரகசிய காப்பு பிரமாணம் மீறலாகாதா?’- அதிமுக கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?
    Featured

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 parthiba
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன்  பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன், நீதிபதி தண்டபாணி முன் ஆஜராகி சான்றிதழை காண்பித்தார். அப்போது, நீங்கள் மட்டும் பயனடைந்தால் போதாது, இதுபோல சான்றிதழ் கோரும் நபர்களும் பயனடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, இதுசம்பந்தமாக பொது நல வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், சாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்று பெறும் வகையில், சட்டம், அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பார்த்திபன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது; ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது; தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால், சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

    சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை; தற்போது சாதி மதமாற்றவர் என சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் ஏதும் இல்லாததால், புதிதாக சட்டம் இயற்றும்போது, சாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என பார்த்திபன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ஆகஸ்ட் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    Joseph Vijay Madras High Court Public Interest Litigation R Parthiban Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்
    Next Article வயலில் சிக்கிய முதலை!. தோளில் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நபர்! வைரல் வீடியோ!
    Editor TN Talks

    Related Posts

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    August 1, 2026

    “எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு

    August 1, 2026

    ’பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம்… ரகசிய காப்பு பிரமாணம் மீறலாகாதா?’- அதிமுக கேள்வி

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிரம்ப்புக்கு பதிலடி… அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைப்போம்… ஈரான் எச்சரிக்கை!

    “எனக்கு 15 வயதுதான்… என்னை மன்னித்து விடுங்கள்” – பிரதமரை அவதூறாகப் பேசிய சிறுமியின் மன்னிப்பு

    ’பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம்… ரகசிய காப்பு பிரமாணம் மீறலாகாதா?’- அதிமுக கேள்வி

    தமிழக மக்களுக்கு குட்நியூஸ்..! ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்யும்..! வானிலை மையம் தகவல்..!

    தருமபுரி : மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு..! பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போராட்டம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.