Author: Editor TN Talks

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் விவசாயிகளைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது… காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியின்போது 2018 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து,  தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளத். அத தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு மாதாந்திர வாரியாக காவிரி தண்ணீர் திறக்கப்படவேண்டும். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தண்ணீர் வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் வாதாடி போராடிதான் தண்ணீரைப் பெறூம் நிலை உள்ளது. புதிதாக கர்நாடகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிவக்குமார்,மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் எனக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால் டெல்டா…

Read More

மேகதாது விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஒன்றிய அமைச்சர் பேசி வருவதாக பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார். சேலத்தில்,  தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது… மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. காவிரி படுகையில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது குறித்து முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை என ஒன்றிய அமைச்சர் கூறி இருப்பது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். எந்த ஒரு நதிநீர் படுகையிலும் அணை அல்லது கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது கடைமடை மாநிலத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். நாடாளுமன்றத்தில் அன்புமணி எம்பி மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்…

Read More

அரசு நிர்வாகங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தை பாதுகாப்பாக செயல்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன்  நாடாளுமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) செயல் திட்டங்களின் விவரங்கள் என்ன? அவற்றில் ஒப்புதல் அளிக்கப்பட்டவை, நிராகரிக்கப்பட்டவை மற்றும் தற்போது பரிசீலனையில் உள்ளவை எத்தனை? அவற்றை மதிப்பீடு செய்வதற்காக பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் என்ன? ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலுக்கான AI செயல் திட்டங்களை உருவாக்கும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதா? அவ்வாறாயின் அதன் விவரங்கள் என்ன? AI-அடிப்படையிலான நிர்வாகத் தீர்வுகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு…

Read More

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 19-ஆம் தேதி, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, மேகதாது விவகாரத்தை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு அதிமுக, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜூன் 18-ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட தீர்மான நகலில் இந்தத் திருத்தம் இடம்பெறவில்லை…

Read More

மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் ரீல்ஸ் மோகத்தில் இருக்க, அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவலங்கள் அரங்கேறுவதாக  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படாததால் விபத்தில் காயமடைந்த பரமேஸ்வரன் என்பவர் உயிரிழந்து விட்டதாகவும், கோபிச்செட்டிபாளையம் அருகே குழந்தைகள் நல மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், தேனி பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கையில், தமிழகத்தின் சுகாதாரத்துறை எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகக் தெரிகிறது என எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். மேலும், பதவியேற்ற புதிதில், “அரசு அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம்” என்று வசனம் பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், படத்திற்கு போவது போலவும், பைக்கில்…

Read More

நாடாளுமன்ற  ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச்  சட்டத்திற்கும் எதிராக எந்தவித விவாதமுமின்றி  வந்தே மாதரம் பாடலுக்கு அதிகாரமளிக்கும் வகையில், “தேசிய மரியாதைக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்கும் (திருத்த) மசோதா-2026 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய செயலாளருமான நவாஸ்கனி தனது எக்ஸ்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் இத்தகைய சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது எனக் கூறியுள்ள நவாஸ்கனி, அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்த மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்டவைகளுக்கு எதிரான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும், கலந்துரையாடலும் இன்றி நிறைவேற்றியது சர்வாதிகாரத்தின் உச்சம் எனச் சாடியுள்ளார். பாஜக அரசின் பாசிச சிந்தனையும், சர்வாதிகார சிந்தனையும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேராபத்து என்று எச்சரித்துள்ள நவாஸ்கனி எம்.பி, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நாட்டைக் காக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் என வலியுறுத்தியுள்ளார்.

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் மற்றும் யாஷ் வீர் சிங் ஆகிய மூவரும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். பலத்த காற்று வீசியதால் போட்டி வீரர்களுக்கு சவாலாக இருந்த நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 76.28 மீட்டர் மட்டுமே எறிந்தார். பின்னர் இரண்டாவது முயற்சியில் 79.61 மீட்டர் எறிந்து தகுதிச்சுற்றில் 5-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தகுதி உறுதியானதால் மூன்றாவது முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் யாஷ் வீர் சிங், முதல் முயற்சியில் 73.89 மீட்டர் எறிந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி முயற்சியில் 78.36 மீட்டர் எறிந்து 10-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ரோகித் யாதவ் முதல் முயற்சியில் 77.04 மீட்டர் எறிந்தார். இரண்டாவது முயற்சியில் 78.37 மீட்டர் எறிந்து 9-வது…

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்க (IOA) தலைவர் பி.டி. உஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது. இன்னும் பல பதக்கங்கள் வர உள்ளன என்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ள பி.டி.உஷா, மாற்றுத்திறனாளி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் ‘டீம் இந்தியா’வின் ஒரு பகுதிதான். தடகளப் போட்டிகளில் பதக்கம் வெல்வது மிகவும் கடினம். ஆனால் இந்த முறை நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 10,000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளோம். இது மிகவும் சிறப்பான செயல்பாடு” என்றார். மேலும், “2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தும் போது, இதைவிட அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்றும் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கான அரசின்…

Read More

ஆண்கள் டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் மீண்டும் பொறுப்பேற்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக 18 ஆண்டுகள் செயல்பட்ட ஃப்ளெமிங், அந்த அணியை 5 ஐபிஎல் கோப்பைகளையும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் வழிநடத்தியவர். நியூசிலாந்து அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, 28 வெற்றிகளைப் பெற்ற அனுபவமும் அவருக்கு உள்ளது. இதுகுறித்து ஃப்ளெமிங் கூறுகையில், “இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம். பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் உருவாக்கிய முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அணியை நீண்டகால வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறேன். இளம் வீரர்களை உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாக்குவது முக்கிய இலக்கு. மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ ரூட்டுடன் இணைந்து…

Read More

டாஸ்மார்க்கை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று தனியாருக்கு தாரை பார்த்தது போல லாக்கப் டெத்தை  கட்டுப்படுத்த முடியவில்லை  என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை என கல்வித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பாரா என முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் தலைமையிலான த‌வெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன், புழல் சிறையில் பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன், தூத்துக்குடியில் அருணாச்சலம் என காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோது   ஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு கிடைத்து விட்டதாக ஜென்சி தலைமுறையினர் நினைத்தனர். ஆனால் அந்த நெப்போலின் விஜய் இன்று மறைந்துவிட்டாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்ன விமர்சித்துள்ளார். இந்த லாக்கெப் மரணங்களுக்கு எல்லாம் பொறுப்பேற்று தன் பதவியை விஜய் துறக்க வேண்டும் எனக்கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார், மாற்றம் வேண்டும் என்று…

Read More