டாஸ்மார்க்கை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று தனியாருக்கு தாரை பார்த்தது போல லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை என கல்வித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பாரா என முதலமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் தலைமையிலான தவெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன், புழல் சிறையில் பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன், தூத்துக்குடியில் அருணாச்சலம் என காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோது ஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு கிடைத்து விட்டதாக ஜென்சி தலைமுறையினர் நினைத்தனர். ஆனால் அந்த நெப்போலின் விஜய் இன்று மறைந்துவிட்டாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்ன விமர்சித்துள்ளார்.
இந்த லாக்கெப் மரணங்களுக்கு எல்லாம் பொறுப்பேற்று தன் பதவியை விஜய் துறக்க வேண்டும் எனக்கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார்,
மாற்றம் வேண்டும் என்று கேட்ட மக்களுக்கு அதிரடி பரிசாக டாஸ்மாக் மதுபான கடைகளை தனியார் மயமாக்குகின்ற மாற்றம் நடக்கிறது.
மதுபான விற்பனை முறைகேட்டை என்னால் தடுக்க முடியல்லை என்று தனியார் மயம் ஆக்கியுள்ளார். இதேபோல் லாக்கப் டெத் மரணம் இன்றைக்கு தடுக்க முடியவில்லை என்று காவல்துறையை தனியார்மயம் ஆக்கி விடுவாரா?
அரசு மருத்துவமனை, போக்குவரத்து துறை, கல்வித் துறையையும் தனியார் மயமாக்கி விடுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
த.வெ.க.அரசின் தடுமாற்றத்தை பார்க்கிற போது ,இந்த அரசு இன்னும் எத்தனை நாளைக்கு என்பதுதான் இந்த மக்களிடத்தில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார், அனுபமில்லாத அரசு, ஆற்றல் இல்லாத அரசு, அரைவேக்கட்டுத்தனமாக அரசு, இன்னும் எத்தனை இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைப்பார் என்று பார்ப்போம் என விமர்சித்துள்ளார்.
